[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உத்தரப்பிரதேசம் ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23ஆக உயர்வு
  • BREAKING-NEWS தமிழக அரசியலில் விசிக மாநில சுயாட்சி மாநாடு திருப்பு முனையாக அமையும்: திருமாவளவன்
  • BREAKING-NEWS உத்தரப்பிரதேசம் ரயில் விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS அதிமுகவின் 3 அணிகளும் எந்த ஒரு கொள்கையும் இல்லாமல் செயல்படுகின்றன: நல்லகண்ணு
  • BREAKING-NEWS உத்தரப்பிரதேசத்தில் ரயில் தடம்புரண்டு விபத்து
  • BREAKING-NEWS திராவிடத்தால் உரமேற்றப்பட்ட மண் திருவாரூர்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவின் இரு அணிகள் விரைவில் இணையும்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS சென்னை: பள்ளிக்கரணையில் தண்ணீர் லாரி மோதியதில் இளைஞர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS விரைவில் இரு அணிகளும் இணையும்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் குறித்து மக்களுக்கு சில சந்தேகங்கள் உள்ளது: தமிழிசை
  • BREAKING-NEWS மதுரை: இடையபட்டியில் தேனீக்கள் கொட்டியதில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் காயம்
  • BREAKING-NEWS அதிமுக அணிகள் இணைப்புக்கு நான் முட்டுக்கட்டையா?: கே.பி.முனுசாமி விளக்கம்
  • BREAKING-NEWS இணைப்பு பற்றிய பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது: ஓ.பன்னீர் செல்வம்
  • BREAKING-NEWS சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் தங்குவதற்கு கூடுதல் அறைகள் திறப்பு
அறிவியல் & தொழில்நுட்பம் 16 Jul, 2017 08:40 PM

ஜியோ ஸ்மார்ட்போன்கள் விலை அதிரடி குறைப்பு

jio-model-phones-models-rate-reduced

ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் சந்தையைத் தொடர்ந்து ஸ்மார்ட்போன் சந்தையிலும் கவனம் செலுத்தி வருகிறது. லைஃப் பிரான்டின் கீழ் அந்நிறுவனம் விற்பனை செய்து வரும் ஸ்மார்ட்போன்களுக்கு புதிய தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோவின் லைஃப் பிரான்டு ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலைப்பட்டியலின் படி லைஃப் ஸ்மார்ட்போன்களின் விலை 60 சதவிகிதம் குறைந்துள்ளது. புதிய விலைப்பட்டியல் ஜியோ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. லைஃப் ஸ்மார்ட்போன்களில் லைஃப் வாட்டர் 1, F1s, வாட்டர் 11 மற்றும் F1 ஸ்மார்ட்போன்களுக்கு அதிகபட்ச தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. 

லைஃப் வாட்டர் 1 ஸ்மார்ட்போன் ரூ.17,399 விலையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் ரூ.6,898 குறைக்கப்பட்டுள்ளது. லைஃப் F1s மாடலின் விலை ரூ.20,249-இல் இருந்து 53 சதவிகிதம் குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.9,499க்கு விற்பனை செய்யப்படுகின்றது. லைஃப் வாட்டர் 11 ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ.7,249 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை முன்னதாக ரூ.11,699க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ரூ.16,499க்கு விற்பனை செய்யப்பட்ட லைஃப் F1 ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ.9,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ தனது தண் தணா தண் சலுகைகளை மாற்றியமைத்தது. புதிய மாற்றங்களின் படி ஜியோ சேவைகளின் வேலிடிட்டி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய திட்டத்தின்படி ரூ.399க்கு 84 ஜிபி டேட்டாவினை 84 நாட்களுக்கு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close