உலகின் மிகச்சிறிய 30கிராம் எடை கொண்ட, 4 நாட்கள் பேட்டரி திறன் கொண்ட எலாரி நானோ போன் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ரஷ்யா நாட்டைச் சேர்ந்த எலாரி நிறுவனம் உருவாக்கியுள்ள உலகின் மிகச்சிறிய அதாவது கிரெடிட் கார்டு அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ள நானோ போன் சி எடை வெறும் 30 கிராம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகவும் ஸ்டைலிஷனான பட்டன்களுடன் அழகாக வடிவமைப்பை பெற்றுள்ள இந்த எலாரி நானோ போன் சி போன் – 94.4 மில்லிமீட்டர் நீளமும், 35.85 மில்லிமீட்டர் அகலமும் கொண்டுள்ளது. இந்த போன் 7.6 மில்லிமீட்டர் தடிமத்துடன், 30 கிராம் எடையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த குட்டி ஃபோன் கருப்பு, ரோஸ் கோல்டு, மற்றும் சில்வர் ஆகிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஃபோனின் டிஸ்ப்ளே 1 அங்குலம் 128×96 பிக்சல் தீர்மானத்துடன் டிஎப்டி பெற்றதாக உள்ளது. 280mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்ற இந்த மொபைல் 4 மணி நேர டாக்டைம் மற்றும் 4 நாட்கள் வரையிலான பேட்டரி திறனை கொண்டிருக்கும். இரு ஜிஎஸ்எம் மைக்ரோ சிம் கார்டுகளை பயன்படுத்தும் ஸ்லாட்களுடன், எம்பி 3 பிளேயர், எப்எம், வாய்ஸ் ரெக்கார்டு, போன் அழைப்பு பதிவு மற்றும் அலாரம் போன்றவற்றுடன் கூடுதலாக ஹெட்போன் ஜாக், மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் புளூடுத் போன்றவை இடம்பெற்றுள்ளது.
பாலம் இல்லாத பரிதாபம் - 30 ஆண்டுகளாக அச்சத்துடன் படகில் செல்லும் மக்கள்
“நித்யானந்தா அழைத்தால் ‘கைலாசம்’ செல்லத் தயார்” - ஆர்வத்தில் மடாதிபதி
28 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணையும் குஷ்பு - உறுதியானது மீனா கதாபாத்திரம்
பழங்குடியின மக்களின் வாழ்க்கைக்கு போராடிய இளைஞர் - விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு
குடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே
“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..!
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
தாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்ஷன்: மனங்களை வென்ற வீடியோ!