[X] Close
JUST IN
 • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,039 கன அடியில் இருந்து 1,576 கன அடியாக குறைந்தது
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற புகாரில் டிடிவி தினகரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
 • BREAKING-NEWS கொளத்தூர் நகைகடை கொள்ளையர்களை ராஜஸ்தானில் பிடிக்க முயன்றபோது காவல் ஆய்வாளர் பெரியபாண்டி சுட்டுக்கொலை
 • BREAKING-NEWS ஈரான் நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் நில நடுக்கம்- ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு
 • BREAKING-NEWS தேனி: பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 13வது நாளாக தடை விதிப்பு
 • BREAKING-NEWS எதிர்காலத்தில் சாதிய ஆணவப் படுகொலைகளைத் தடுக்க இந்த தண்டனை உதவும்- பாலபாரதி
 • BREAKING-NEWS உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, பாண்டித்துரை, பிரசன்னகுமார் ஆகியோர் விடுதலை
 • BREAKING-NEWS உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு தூக்கு தண்டனை
 • BREAKING-NEWS உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் தீர்ப்பு- 6 பேருக்கு தூக்கு
 • BREAKING-NEWS முழு உடல்நலன், மன நிறைவுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என ரஜினிகாந்திற்கு வைகோ வாழ்த்து
 • BREAKING-NEWS ஒகி புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய கன்னியாகுமரிக்கு இன்று செல்கிறார் முதலமைச்சர்
 • BREAKING-NEWS நெடுந்தீவு மற்றும் கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 27 பேர் இலங்கை கடற்படையால் கைது
 • BREAKING-NEWS கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு
 • BREAKING-NEWS கடல்சீற்றம் தணிந்ததால் நாகையில் 53 கிராம மீனவர்கள் 15 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்
அறிவியல் & தொழில்நுட்பம் 11 Jul, 2017 01:15 PM

உடனடியாக துணிகள் உலரும் - இந்திய விஞ்ஞானியின் அல்ட்ராசோனிக் ட்ரையர்

indian-american-viral-patel-invents-dryer-that-requires-no-heat

அமெரிக்காவில் வாழும் இந்திய விஞ்ஞானி விரால் படேல் வெப்பம் இல்லாமல், துவைத்தவுடன் துணிகளை ஐந்து மடங்கு வேகமாக உலர வைக்கக் கூடிய அல்ட்ராசோனிக் இயந்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

அமெரிக்காவின் டென்னிசிலுள்ள ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வகத்தில் ஆய்வுப்பணியில் இருக்கும் விரால் படேல், தனது குழுவுடன் இணைந்து துணிகளை மிக வேகமாக உலர வைத்து அதனை அயர்ன் செய்யவும் கூடிய 'அல்ட்ராசோனிக் டிரையர்' ஒன்றை வடிவமைத்துள்ளார். நாம் தற்போது சாதரணமாக துணியை சலவைச் செய்து, காய வைத்துப் பின்னர் அயர்ன் செய்ய எடுத்துக்கொள்ளும் நேரத்தை விட, ஐந்து மடங்கு வேகமாக இந்த ட்ரையர் நேரத்தை மிச்சப்படுத்தும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விரால் பேசும்போது, ”இது முற்றிலும் புதிய வகையான முறையில் வேலைசெய்யக் கூடியது. பொதுவாக ட்ரையர்கள் துணியில் இருக்கும் ஈரத்தை நீராவியாக மாற்றி துணிகளை உலரச்செய்யும். ஆனால் இந்த அல்ட்ராசோனிக் இயந்திரம், வெப்பம் இல்லாமல் துணிகளில் உள்ள ஈரத்தை உறிஞ்சி எடுக்கும் வகையில் உருவக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

ஆடையில் உள்ள தண்ணீரை ஈர்க்கும் வகையில் அதிர்வலைகளை இந்த இயந்திரம் உருவாக்கும். அதன் மூலமாக நீர் மொத்தமாக ஒரு இடத்தில் குவிக்கப்பட்டு பின்பு உறிஞ்சி எடுக்கப்படுகிறது. வணிக ரீதியாக சில மாற்றங்களை செய்த பிறகு, இரண்டு முதல் ஐந்து வருடங்களுக்குள் நுகர்வோர் பயன்பாட்டுக்கு இந்த ட்ரையர் வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close