[X] Close
JUST IN
 • BREAKING-NEWS ஆட்சிக்கும் கட்சிக்கும் தொல்லை கொடுக்க சிலர் முயற்சிக்கின்றனர்: முதலமைச்சர் பழனிசாமி
 • BREAKING-NEWS சிறப்புப் பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு நாளை காலை 9 மணிக்கு தொடங்குகிறது
 • BREAKING-NEWS சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
 • BREAKING-NEWS சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி ஈபிஎஸ் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: முத்தரசன்
 • BREAKING-NEWS உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு சாய்னா முன்னேற்றம்
 • BREAKING-NEWS வேளாண் இளநிலை பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு வரும் 28ஆம் தேதி தொடங்குகிறது
 • BREAKING-NEWS ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது
 • BREAKING-NEWS தொடர் ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்பதாக மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவிப்பு
 • BREAKING-NEWS அதிமுக பொதுக்குழுவை கூட்டும் போது யாருக்கு வலிமை எனத் தெரியும்: எம்எல்ஏ ஆறுகுட்டி
 • BREAKING-NEWS தற்காலிகமாக மூடப்பட்ட வெள்ளை மாளிகை
 • BREAKING-NEWS புதிய ரூ.200 நோட்டை அறிமுகப்படுத்துவதற்கான அரசாணை வெளியீடு
 • BREAKING-NEWS நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் வெற்றி பெறுவோம்: அமைச்சர் பெஞ்சமின்
 • BREAKING-NEWS என்னுடைய ஆதரவு யாருக்கு என்பதை நாளை அறிவிப்பேன்: தோப்பு வெங்கடாசலம் எம்எல்ஏ
 • BREAKING-NEWS மருத்துவப் படிப்பு- தரவரிசைப் பட்டியல் வெளியீடு
அறிவியல் & தொழில்நுட்பம் 27 Jun, 2017 09:03 PM

வேற்றுலகவாசிகள் இருக்கிறார்களா..? அனானிமஸின் அதிர்ச்சி வீடியோ 

nasa-says-it-hasn-t-found-alien-life-following-video-claims-by-hacker-group-anonymous

பேரண்டத்தில் நாம் மட்டும்தான் இருக்கிறோமா என்ற கேள்விக்கு, ஆம் என்றோ இல்லை என்றோ யாரும் உறுதியான பதிலை இதுவரை தந்ததில்லை. இந்தக் கேள்வியைப் புதுப்பிக்கும் வகையிலான ஒரு வீடியோ வெளியாகி இருக்கிறது.  

வேற்றுலகவாசிகள் பூமிக்கு வந்திருக்கிறார்கள் என்பதை நம்புவது பலருக்குக் கடினமாக இருக்கலாம். ஆனால், ஒரு சாரார் வேற்றுலகவாசிகள் பூமிக்கு வந்தார்கள் என்பதையும் தாண்டி, பல செயல்களுக்கு அவர்களே காரணம் என்றும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். பிரமிடுகள் போன்ற பூமியின் பிரமாண்டமான கட்டுமானங்களை உருவாக்கியது முதல், கொலம்பியா விண்கலம் வெடித்துச் சிதறியதுவரை பலவற்றிலும் வேற்றுலவாசிகளின் தொடர்பு இருக்கலாம் என்று மனிதர்களின் ஒரு பிரிவினர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
 கடந்த சில நூற்றாண்டுகளில் பூமியின் பல பகுதிகளிலும், வானில் பறந்து கொண்டிருந்தபோதும், விண்வெளியில் சுற்றிக் கொண்டிருந்தபோதும் பறக்கும் தட்டுகளைப் பார்த்ததாகவும் பலர் கூறியிருக்கின்றனர். புகைப்படங்களாகவும் பேட்டிகளாகவும் ஆதாரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. ஆனாலும் ஏலியன்கள் இருக்கிறார்கள் என்பதையோ, பறக்கும் தட்டுகள் பூமிக்கு வந்தன என்பதையோ எந்த நாட்டு அரசும் இதுவரை ஒப்புக் கொண்டதில்லை. 

ஆனால் அப்படியொரு அறிவிப்பு வெளியிடப்படுவதாக கடந்த வாரத்தில் இருந்து ஒரு வீடியோ யூட்யூபில் சுற்றிக் கொண்டிருக்கிறது. அனானிமஸ் என்ற ஹேக்கிங் குழுமத்தைச் சேர்ந்தவர்கள் வெளியிட்ட இந்த வீடியோ, நாசா அமைப்பு வேற்றுலக வாசிகள் இருப்பதைக் கண்டுபிடித்து விட்டதாகக் கூறியது. நாசா விஞ்ஞானி ஒருவரின் கருத்துகளை மேற்கோள்காட்டி, ஏலியன்களை நாசா கண்டுபிடித்திருப்பது உறுதி எனவும் இந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பறக்கும் தட்டுகள் வருவது போன்ற காட்சிகளும் இதில் இடம்பெற்றிருக்கின்றன. 18 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்த இந்த விடியோ தொடர்ந்து வேகமாகப் பரவி வருகிறது. இந்த நிலையில், அப்படியொரு எந்த அறிவிப்பையும் வெளியிடும் திட்டமில்லை என்று நாசா கூறியிருக்கிறது. அனானிமஸ் வீடியோவில் குறிப்பிடப்பட்டிருக்கும் விஞ்ஞானியும், இதே கருத்தைத் தெரிவித்திருக்கிறார். தமது கருத்துகள் தவறாகப் பொருத்திக் கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், ஏரியா 51, ராஸ்வெல் பறக்கும் தட்டு என வேற்றுலகவாசிகள் பற்றிய பல கதைகளைக் கொண்டிருக்கும் அமெரிக்காவில் அனானிமஸ் வெளியிட்ட வீடியோ அதிர்வலைகளை உருவாக்கத் தவறவில்லை.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close