[X] Close
JUST IN
 • BREAKING-NEWS அண்ணா அறிவாலயத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி வருகை
 • BREAKING-NEWS டிடிவி தினகரன் யார்?, கட்சியின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லை: முதலமைச்சர் பழனிசாமி
 • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் திமுக வேட்பாளரை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரப்புரை
 • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் திமுக வேட்பாளரை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரப்புரை
 • BREAKING-NEWS உடல்நலன் கருதி அரசியலில் இருந்து விலக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி முடிவெடுத்திருப்பதாக தகவல்
 • BREAKING-NEWS ராஜஸ்தானில் கொள்ளையன் நாதுராமின் கூட்டாளிகள் 4 பேர் கைது
 • BREAKING-NEWS வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் செல்போன், டிவிக்கான சுங்கவரி 10% இருந்து 20% உயர்வு- மத்திய அரசு
 • BREAKING-NEWS அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31 வரை அவகாசம்- உச்சநீதிமன்றம்
 • BREAKING-NEWS கடலூரில் ஆய்வு மேற்கொள்ள சென்ற ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி பேரணி
 • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 15வது நாளாக தடை விதிப்பு
 • BREAKING-NEWS திருவாரூர், நாகை, புதுச்சேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது
 • BREAKING-NEWS அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் கன்னியாகுமரியில் இன்று முழு அடைப்பு போராட்டம்
 • BREAKING-NEWS டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
 • BREAKING-NEWS சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் வரும் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
அறிவியல் & தொழில்நுட்பம் 24 Jun, 2017 06:01 PM

ஆதார் எண்ணைக் கொடுத்தால் வங்கிக் கணக்கு காலியாகுமா?... வாட்ஸ் அப் பகீர்

whatsapp-message-about-fake-phone-calls

செல்போன் நிறுவனங்களிலிருந்து அழைப்பதாகக் கூறி உங்களுக்கு வரும் அழைப்புகளைக் கவனமாகக் கையாளுங்கள் என்று கூறி வாட்ஸ் அப்பில் ஒரு வாய்ஸ் மெசேஜ் வைரலாகப் பரவி வருகிறது. 

அந்த வாய்ஸ் மெசேஜின் சாராம்சம் இதுதான்: செல்போன் நிறுவனங்களிலிருந்து அழைப்பதகாக் கூறி உங்களின் ஆதார் எண் குறித்த தகவல்கள் கேட்கப்படும். அப்படி அழைப்பவர்களிடம் உங்கள் ஆதார் எண்ணைக் கொடுத்தால், உங்கள் செல்போன் எண்ணுக்கு வரும் ஓடிபி (OTP) எனப்படும் ஒன்டைம் பாஸ்வேர்டையும் அவர்கள் கேட்பார்கள். அப்படி ஓடிபியையும் நீங்கள் கொடுத்துவிட்டால் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை மொத்தமாக சுருட்டி விடுவார்கள். எனவே எச்சரிக்கையாக இருங்கள் என அந்த வாய்ஸ் மெசேஜ் எச்சரிக்கிறது. 
இது உண்மையா?. ஆதார் எண்ணைக் கொடுத்தால் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தினை மொத்தமாக எடுக்க முடியுமா?. நாடு முழுவதும் ஆதார் கார்டுகளை வழங்கிவரும் இந்திய தனிநபர் அடையாள அமைப்பு இதுகுறித்து விளக்கமளித்துள்ளது. எந்த அமைப்போ அல்லது நிறுவனமோ உங்களது ஆதார் எண் குறித்த தகவல்களை போன் மூலம் கேட்பதில்லை. எனவே இதுபோன்ற போன்கால்களை பொதுமக்கள் நிராகரிக்கலாம். ஆனால், ஆதார் எண்ணைப் பகிர்ந்துகொள்வது உங்கள் இ-மெயில் முகவரியை பகிர்ந்துகொள்வது போன்றதே என்று கூறும் சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள், ஆனால் ஓடிபி குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்வது ஆபத்து என்கிறார்கள். வாடிக்கையாளர்களின் ஆதார் எண் குறித்த விபரங்களைக் கேட்டு தொலைதொடர்பு நிறுவனங்கள் தரப்பிலிருந்து எந்தவித அழைப்பும் மேற்கொள்ளப்படுவதில்லை என்கிறார்கள் குறிப்பிட்ட நிறுவங்களைச் சேர்ந்தவர்கள். ஓடிபி, ஆன்லைன் பேங்கிங் உள்ளிட்ட வங்கிக் கணக்கு தொடர்பான  தனிப்பட்ட விபரங்களை மூன்றாவது நபரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்று வங்கிகள் தரப்பில் எச்சரிக்கிறார்கள். இதுபோன்ற தகவல்களை எந்த வங்கியும் கேட்பதில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close