[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு
  • BREAKING-NEWS சர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு
  • BREAKING-NEWS வரும் 29-ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச

ஜியோவின் அடுத்த அதிரடி: ரிலையன்ஸ் லைஃப் மொபைல் சலுகை

reliance-announces-new-offer-for-jio-users

ரிலையன்ஸ் ஜியோ, லைஃப் மொபைல் பயன்படுத்தும் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய இலவச சலுகையை அளிப்பதாக அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் லைஃப் (Lyf) மொபைல் போன் பயன்படுத்துவோருக்கு, ரிலையன்ஸ் ஜியோ சேவையில் மேலும் 20 சதவீத டேட்டா இலவசமாக அளிப்பதாக ரிலையன்ஸ் அறிவித்திருக்கிறது. ரூ.6600 முதல் ரூ.9000 வரையான லைஃப் வாட்டர் (Lyf Water) சீரீஸ் மொபைல்களை பயன்படுத்துவோருக்கு மட்டும் இந்த ஆஃபர் கிடைக்கும் என ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது. அதாவது, குறிப்பிட்ட 10 லைஃப் வாட்டர் சீரிஸ் மொபைல்களில் ஜியோவைப் பயன்படுத்துபவர்கள், தினசரி 1GB 4G டேட்டாவுக்குப் பதிலாக 1.2GB 4G டேட்டாவைப் பெறுவார்கள்.

லைஃப் மொபைலில் ஜியோ சிம்கார்டைப் பயன்படுத்தத் தொடங்கிய 48 மணிநேரத்தில் இந்த சலுகை செயல்படுத்தப்படும். புதிதாக லைஃப் மொபைலை வாங்குபவர்கள், இந்த சலுகையை ஒவ்வொரு மாதமும், ஒரு சிறுதொகையை செலுத்தி 2018, மார்ச் 31 வரை ரீஆக்டிவேட் (reactivate) செய்துகொள்ளலாம்.

ஜியோ நிறுவனம், குறுகிய காலத்தில் இந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close