[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

ஸ்மார்ட்ஃபோன்களில் ஹோலோகிராம்!

hologram-bring-3d-technology-to-smartphone-released-soon

அசுர வேகத்தில் வளர்ந்துவரும் தொழிநுட்ப உலகில் நிஜத்தில் பார்ப்பது போன்ற 3D காட்சிகளை ஸ்மார்ட் ஃபோன்களில் காணும் தொழில்நுட்பம் விரைவில் அறிமுகமாகிறது. 

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை முப்பரிமாண முறையில் நிஜம் போன்று தோற்றுவிக்கும் தொழில்நுட்பமே ஹோலோகிராம். ஆஸ்திரேலியா மற்றும் சீனா விஞ்ஞானிகள் நானோ-ஹோலோகிராம் தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளனர். இத்தொழில்நுட்பமானது விரைவில் ஸ்மார்ட் ஃபோன்களில் தரப்படவுள்ளதாக RMIT பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

பொதுவாக இதுபோன்ற தொழில்நுட்பத்தை, கணினி மற்றும் திரையரங்குகளில் மட்டுமே பார்க்க முடியும். 3D கண்ணாடிகள் அணிந்து இதைப் பார்க்கலாம். ஆனால் ஸ்மார்ட் ஃபோன்களில் முப்பரிமாண காட்சிகளை, 3D கண்ணாடிகள் இல்லாமல் பார்க்க முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 
கணினிகளில் உருவாக்கப்படும் ஹோலோகிராம் காட்சிகள் மிக பெரியவை. இது அறிமுகம் செய்யப்பட்டால் அதுவே உலகின் மிகவும் சிறிய ஹோலோகிராம் காட்சியாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது ஸ்மார்ட் ஃபோன்களில் உருவாக்கப்படும் ஹோலோகிராம் காட்சிகள் தலை முடி ஒன்றை விடவும் 1,000 மடங்கு சிறியதாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இத்தொழில்நுட்பத்தினை ஸ்மார்ட்ஃபோன்களில் மட்டுமன்றி கணினித்திரைகள் மற்றும் தொலைக்காட்சிகளிலும் பயன்படுத்த முடியும். ஹோலோகிராம் தொழில்நுட்பத்தில், ஃபோன்களின் எல்சிடி திரையின் மேற்பகுதியில் நிஜத்தில் பார்ப்பது போன்ற முப்பரிமாண காட்சிகள் தோன்றும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close