[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை
  • BREAKING-NEWS உன்னாவ் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழிப்பு
  • BREAKING-NEWS ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
  • BREAKING-NEWS வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
  • BREAKING-NEWS போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்கள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS தெலங்கானா: 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது - தெலங்கானா போலீஸ்
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்

ஃபேஸ்புக்கில் இனி போலி இருக்காதாம்!

will-be-no-duplicate-on-facebook

ஃபேஸ்புக்கில் உள்ள போலி கணக்குகளை கண்டறிந்து அகற்றும் பணி தொடங்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் ஃபேஸ்புக், டிவிட்டருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஃபேஸ்புக்கில் பலர் கணக்குத் தொடங்கி தங்கள் கருத்துக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இதில் போலி கணக்கு வைத்துள்ளவர்கள் தவறான தகவலை பரப்புவதாகவும் கடந்தாண்டு நடந்த அமெரிக்க‌ அதிபர் தேர்தலில் இது தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் ஃபேஸ்புக் நிறுவனம் மீது புகார்கள் கூறப்பட்டிருந்தன. இதையடுத்து, ஃபேஸ்புக்கில் போலி கணக்குகளை கண்டறிந்து அகற்றும் பணியை அந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

ஃபேஸ்புக் ‌நிறுவனத்தின் பயனாளி‌கள் பாதுகாப்பு பிரிவு தலைவர் ஷப்னம் ஷேக் இதை தெரிவித்துள்ளார். நவீன யுக்திகள் மூலம் போலி கணக்குகள் கண்டறியப்பட்டு வருவதாகவும் பிரான்ஸ் நாட்டில் இம்முறையை பயன்படுத்தி 30 ஆயிரம் போலி கணக்குகள் ‌அகற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close