[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

திருவிழாவில் உணவு பரிமாறிய ரோபோ

robo-served-food-in-festival

பெங்களூருவில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் மனிதர்களுக்கு பதிலாக ரோபோ உணவு பரிமாறி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

பெங்களூர் விஆர் மாலில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட பாப்” (Butler ‘o’ Bistro) என்கிற ரோபோதான் உணவு பரிமாறியது. குழந்தைகளை வெகுவாக கவர்ந்த அந்த ரோபோவை உருவாக்கியதும் 12 மற்றும் 13 வயதுடைய சிறுவர்கள்தான்.

அர்ஜுன் (13), அனிஷ்(12), ஸ்ரீ வத்சன் (13) ஆகிய சிறுவர்களுடன் வர்ஷா(20) என்கிற இளம் பெண்ணும், அர்ஜுனின் தந்தை ராஜேஷ் வர்மாவும் இணைந்து இந்த ரோபோவை உருவாக்கியுள்ளனர். இந்தியாவிலேயே உணவு பரிமாறும் முதல் ரோபோ இதுதான்.

கிடோபோடிக்ஸ் (Kidobotikz) என்ற நிறுவனம் ஆன்லைன் மூலம் ரோபோ தயாரிப்பு பயிற்சியை அளித்து வருகிறது. இந்த நிறுவனத்தில் பயிற்சி பெரும் சிறுவர்கள்தான் இந்த ரோபோவை உருவாக்கியுள்ளனர். அர்ஜுனின் தந்தை ராஜேஷ் வர்மாவும் கிடோபோக்ஸின் மாணவர்தான்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close