[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS லண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்
  • BREAKING-NEWS கோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்
  • BREAKING-NEWS அசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது

ஸ்மார்ட்போனை அன்லாக் செய்ய திருடர்கள் பயன்படுத்தும் புதிய முறை

thieves-can-steal-your-smartphone-pin-code-in-seconds-using-thermal-cameras

தெர்மல் கேமரா எனும் வெப்ப உணரி கேமராக்கள் உதவியுடன் ஸ்மார்ட்போன் தகவல்களை ஹேக்கர்கள் எளிதில் திருடுவதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஸ்மார்ட்போன் பயனாளர்கள், தங்கள் ஸ்மார்ட்போனைப் பாதுகாக்க பேட்டர்ன் லாக் மற்றும் நம்பர் லாக் என இருவகையான பாதுகாப்பு அம்சங்களை தற்போது பயன்படுத்தி வருகின்றனர். மிகச்சில ஸ்மார்ட்போன்களிலேயே விரல் ரேகை மூலம் லாக் மற்றும் அன்லாக் செய்யும் வசதி இருக்கிறது என்றே கருதப்படுகிறது. ஸ்மார்ட்போனினை கைகளைப் பயன்படுத்தி அன்லாக் செய்யும்போது போனின் திரையில் கைகளின் வெப்பம் சுமார் 30 விநாடிகளுக்கு நீடிக்கும் என்று கருதப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, ஸ்மார்ட்போன் திரையை தெர்மல் கேமிரா மூலம் திருடர்கள் புகைப்படமாகப் பதிவு செய்கின்றனர். அந்த புகைப்படத்தினைப் பயன்படுத்தி ஸ்மார்ட்போனை அன்லாக் செய்யும் பேட்டர்ன் அல்லது ரகசிய குறீயீட்டு எண்களை திருடர்கள் அறிந்துகொள்வதாகவும் தெரியவந்துள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த ஸ்டூட்கர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close