[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

விக்கிப்பீடியாவில் வாக்குவாதத்தில் ஈடுபடும் ரோபோக்கள்

human-like-edit-wars-between-robots-in-wikipedia

மனிதர்களை போல ரோபோக்களும் விக்கிப்பீடியாவில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் குறித்து சண்டையிடுகின்றன என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

விக்கிப்பீடியா தளத்தில் கட்டுரைகளை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட மென்பொருள் ரோபோக்கள் 10 ஆண்டுகளாக அந்த தளத்தில் தகவல்கள் குறித்து சண்டையிடுகின்றன. ஒரு ரோபோ செய்த திருத்தங்களை மற்றொரு ரோபோ மாற்றுவதும் அதை முதல் ரோபோ மீண்டும் திருவத்துமான செயல் தொடர்கிறது என அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளுக்கு (2001-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை) மேலாக 13 வெவ்வேறு மொழிகளில் உள்ள விக்கிபீடியா தளத்தை கண்காணித்து இந்த விபரத்தை கண்டறிந்துள்ளனர். இந்த சமீபத்திய ஆய்வின் படி, ரோபோக்களின் மோதல்கள் ஜெர்மன் பதிப்பு விக்கிபீடியாவில் குறைந்த அளவு இருந்துள்ளன. பத்து ஆண்டுகளில் சராசரியாக 24 முறை ரோபோக்கள் மாறி மாறி திருத்தங்கள் செய்துள்ளன. விக்கிப்பீடியா பதிப்பில், போர்ச்சுகீசிய மொழியில் 185 முறையும் ஆங்கில மொழியில் 105 முறையும் சராசரியாக ரோபோக்கள் திருத்தங்கள் செய்துள்ளன.

விக்கிப்பீடியாவில் ரோபோ எடிட்டர்களின் விகிதம் 0.1 மட்டுமே. மாற்றங்கள் செய்யும் ரோபோக்கள் மிகச் சிறிய அளவு இருந்தாலும் அவை செய்யும் மாற்றங்களின் விகிதம் அதிகம் என்பதையும் அந்த ஆய்வு சுட்டி காட்டியுள்ளது.

வெவ்வேறு நாடுகளில் உள்ள மனிதர்களால் வடிவமைக்கப்படும் ரோபோக்கள் இணையத்தில் ஒருவரை ஒருவர் எதிர்கொள்ளும் போது இந்த மோதல்கள் ஏற்படும். ஒரே தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் கூட கலாச்சார சூழலை பொறுத்து வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே இந்த மோதல்களைத் தவிர்க்க, விஞ்ஞானிகள் ரோபோக்களின் சமூக வாழ்க்கை மற்றும் வேறுபட்ட கலாச்சாரங்களின் மீது கவனம் செலுத்த வேண்டும் என நிபுணர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close