[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

முப்பரிமாண ஜிஃப் பைல்களை இனி வாட்ஸ் அப்பில் ஷேர் செய்யலாம்

whatsapp-1st-ever-3d-animated-gif

தினந்தினம் புதிய அப்டேட்களை வெளியிடும் வாட்ஸ் அப்பில் தற்போது முப்பரிமாண ஜிஃப் பைல்களையும் அனுப்பும் புதிய வசதியை சப்போர்ட் செய்கிறது.

சமூக வலைத் தளங்களில் ஒன்றான வாட்ஸ் அப்பில் ஜிஃப் பைல் சேரிங் ஆப்ஷன் ஏற்கனவே உள்ளது. இளைஞர்கள் மத்தியில் ஜிஃப் பைல் அதிகம் பகிரப்படுவதால், புதுப்புது வசதிகளுடன் வெளிவரும் ஜிஃப் பைல்களை வாட்ஸ் அப் சப்போர்ட் செய்து வருகிறது.

அந்த வகையில், வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் ஜிஃப்பைல்கள் முதலில் எழுத்து வடிவத்தில் மட்டுமே இருந்தன. ஆனால் அதன்பின் தொழில்நுட்ப யுத்திகளை கையாண்டு அனிமேஷன், கிராபிக்ஸ் கார்டுகள் போன்று வெளிவந்தன. அதற்கும் ஒரு படி மேலே சென்று தற்போது முப்பரிமாண பிம்ப ஜிஃப் பைல்களை அனுப்பும் புதிய வசதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முப்பரிமாண ஜிஃப் பைலை வாட்ஸ் அப் சப்போர்ட் செய்யும் நிலையில், தற்போது எறும்பு, பாம்பு ஊறுவது போன்ற முப்பரிமாண ஜிஃப்பைல் வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது. இளைஞர்களை அதிகம் ஈர்த்துள்ள இந்த முப்பரிமாண ஜிஃப் பைல் மெசேஜ் தற்போது அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இனி இது போன்ற நிறைய முப்பரிமாண ஜிஃப் பைல்கள் வாட்ஸ் அப்பில் வலம் வைரலாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close