JUST IN
 • BREAKING-NEWS இந்தியாவில் ஜிஎஸ்டி வரும்போது அமெரிக்க பள்ளிகளில் பாடமாக வைக்கும் நிலை உருவாகும்: பிரதமர் மோடி
 • BREAKING-NEWS குமரி மாவட்டம் நாகர்கோவில், தக்கலை, குழித்துறை உள்ளிட்ட பகுதிகளில் மழை
 • BREAKING-NEWS நெல்லை: சங்கரன்கோவில் அருகே மேலமருதப்புரத்தில் மின்சாரம் தாக்கி தம்பதியர் பலி
 • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா இல்லாமல் இருப்பது சோகமாக உள்ளது: துரைமுருகன்
 • BREAKING-NEWS கருணாநிதி நலமுடன் உள்ளார்; நாள்தோறும் பத்திரிகையை படிக்கவைத்து கேட்டுக்கொள்கிறார்: துரைமுருகன்
 • BREAKING-NEWS வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி பேட்டிங்
 • BREAKING-NEWS முதல்பிறை தெரிந்ததால் தமிழகத்தில் நாளை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்: தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவிப்பு
 • BREAKING-NEWS விளையாட்டில் மாநில, தேசிய அளவில் சாதனை படைக்கும் மாணவர்களை ஊக்குவிக்க நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்
 • BREAKING-NEWS கால தாமதம் ஆனாலும் அதிமுக இரு அணிகள் இணைவது உறுதி: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
 • BREAKING-NEWS தனியார் பாலில் கலப்படம் உள்ளதா என அரசு ரகசியமாக ஆய்வு செய்து வருகிறது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
 • BREAKING-NEWS சென்னையில் காணாமல் போனவர்களில் மே மாதத்தில் மட்டும் 452 பேர் கண்டுபிடிப்பு: சென்னை காவல்துறை
 • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 31 காவல் உதவி ஆய்வாளர்கள் இடமாற்றம்: காவல்துறை
 • BREAKING-NEWS சென்னையில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 13 பேர் குண்டர் சட்டத்தில் கைது
 • BREAKING-NEWS பருத்தி விவசாயிகள் பாதிக்கப்பட்டிருந்தால் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் துரைக்கண்ணு
அறிவியல் & தொழில்நுட்பம் 12 Feb, 2017 12:23 PM

தாலாட்டு பாடி தூங்க வைக்கும் ரோபோ தலையணை

Cinque Terre

வேலைப்பளு, மன அழுத்தம் போன்ற காரணங்களால் இன்றைய அவசரகால வாழ்வில் தூக்கமின்மையால் பலர் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதற்காக தூக்க மாத்திரைகளை சிலர் உட்கொள்வது உண்டு.

இதற்கு தீர்வு காணும் விதமாக ரோபோ தலையணை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. வேர்க்கடலை வடிவத்தில் வளைவான இந்த ரோபோ, நீங்கள் மூச்சுவிடுவதை சீராகக் கண்காணிக்கிறது. அதன்மூலம் உங்கள் தூக்கத்தையும் சீராக்க இது உதவுகிறது. சோம்நாக்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோவை தூங்கும் போது அருகில் வைத்து பயன்படுத்துவதால் சுவாசத்தைக் கட்டுப்படுத்தி அமைதியான மற்றும் ஆழமான தூக்கப் பெறலாம் என்கிறது ஆய்வு.

நெதர்லாந்திலுள்ள டெல்ஃட் பல்கலைகழக ரோபாட்டிக்ஸ் பொறியியல் துறை மாணவர்கள் தலையணை ரோபோவை உருவாக்கியுள்ளனர். உயர் உணர்திறன் சென்சார்கள் இந்த தலையணையில் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் தூங்கி கொண்டிருக்கும் போது நீங்கள் கனவு கண்டு பாதியில் எழுந்தால் ரோபோ தலையணையானது தாலாட்டுப் பாடி தூங்க வைக்கிறது. மேலும் தூக்கத்திற்கு ஏதுவான வகையில் ஒருவகை வெளிச்சத்தில் உள்ள விளக்கையும் எரிய வைக்கிறது. தற்போது இந்த ரோபோ தலையணை சோதனை முயற்சியில் உள்ளது. விரைவில் சந்தையில் களமிறங்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads