[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
  • BREAKING-NEWS ஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

செல்ஃபி பிரியர்களுக்காக வருகிறது செல்ஃப்ளை!

selfly-smartphone-case-camera-drone









ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களுக்கும், செல்ஃபி பிரியர்களுக்கும் என நாள்தோறும் புது தொழில்நுட்பங்கள் அறிமுகமாகின்றன. அந்த வகையில் லண்‌டனில் அறிமுகமாக இருக்கும் புதுமையான ட்ரோன் குறித்து தற்போது பார்க்கலாம். ஸ்மார்ட் போ‌‌ன் கொண்டு செல்பி எடுக்காத நபர்களே இல்லை என சொல்லும் அளவிற்கு செல்பி மோகம்‌ மக்களிடையே அதிகரித்து வருகிறது. செல்பி மோகத்தை ஊக்குவிக்கும் வகையில் அறிமுகமான செல்பி ஸ்டிக் செல்பி பிரியர்களிடையே பெரும் வரவேற்ப‌ பெற்றதை நாம் காண்கிறோம். தற்போது அதையும் மிஞ்சும் தொழில்நுட்பமும் வந்து விட்டது. செல்பீ பிரியர்கள் செல்பி ஸ்டிக்கை கையில் எடுத்துக் கொண்டு அலைய வேண்டிய தேவை இனி இருக்காது. செல்பி ஸ்டிக்கிற்க்கு‌ பதிலாக மினி ட்ரோன் எனப்படும் பறக்கும் கேமரா அறிமுகமாகியுள்ளது. கைகளுக்கு அடக்கமான இந்த மினி ட்ரோனை, நமது ஸ்மார்ட்போனின் பாதுகாப்பு உறையிலேயே வைத்து கொள்ள முடியும் என்பது மற்றொரு சிறப்பு. எங்கு வேண்டுமானாலும் இந்த மினி ட்ரோனை பயன்படுத்தலாம். இதில் பொருத்தப்பட்டுள்ள கேமரா வளைத்து உங்களை படம் பிடிக்கும். இதற்கான செயலியுடன் ஸ்மார்ட்போனில் இணைத்துக் கொண்டால் நமது கட்டளைக்கு ஏற்ப இது புகைப்படங்களை எடுக்கும். இந்த மினி ட்ரோனுக்கு செல்ஃப்ளை (SELFLY) என பெயரிட்டுள்ளனர். இந்த செல்ஃப்ளை, உங்கள் ஸ்மார்ட் போனின் மூன்றாவது கேமரா போல செயல்படும் என்கின்றனர் இதனை உருவாக்கியவர்கள். எந்த உயரத்திலும் எந்த தூரத்திலும் பறந்து உங்களை படம் பிடித்து மகிழ்விக்கும் இந்த கருவியில் வீடியோக்களையும் பதிவு செய்ய முடியும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close