[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
  • BREAKING-NEWS மண்டல பூஜைக்காக இன்று சபரிமலை நடை திறக்கப்படுவதால் 10 ஆயிரம் போலீசார் குவிப்பு

8 ஜிபி ரேம் வசதி கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன்

worlds-first-8gb-ram-smartphone

எட்டு ஜிபி ரேம் வசதியுடன் கூடிய உலகின் முதல் ஸ்மார்ட் போனை தைவானைச் சேர்ந்த ஆசஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆசஸ் ஜென்போன் ஏஆர் என்று அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன், அமெரிக்காவில் லாஸ்வேகாஸில் நடந்து வரும் கன்சூமர் எலக்ட்ரானிக் கண்காட்சியில் (CES2017) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், டேங்கோ (tango)மற்றும் டேட்ரீம் (daydream) என இரு அம்சங்களை கொண்டுள்ளது. டேங்கோ என்பது கனினியில் பயன்படுத்தும் உணரிகளைக் (சென்சார்கள்) கொண்டது. இதன்மூலம் ஒவ்வொரு புகைப்படத்தையும் ஆகுமெண்டட் ரியாலிட்டி எனப்படும் முப்பரிணாம வடிவம் போன்ற தரத்தில் காணமுடியும். அதேபோல டேட்ரீம் வசதி மூலம் விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் கேம்ஸ் மற்றும் வீடியோ வசதி பயனாளர்களுக்குக் கிடைக்கும். இதுதவிர, ஆட்டோ ஃபோகஸ் வசதி கொண்ட 23 மெகாபிக்ஸல் கேமிரா வசதியும், 5.7 இன்ச் திரை மற்றும் உலகின் அதிவேகமான குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 821 புராசஸருடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close