JUST IN
 • BREAKING-NEWS ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 6 பேரை ஜூலை 7 வரை வவுனியா சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு
 • BREAKING-NEWS நேபாளம், பூடானில் அடையாள அட்டையாக ஆதார் ஏற்கப்படாது: உள்துறை அமைச்சகம்
 • BREAKING-NEWS ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் கரை திரும்பவில்லை என புகார்
 • BREAKING-NEWS உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு தயாராக உள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
 • BREAKING-NEWS மாணவிகள் தங்களின் பாதுகாப்பிற்காக தற்காப்பு கலைகளை கற்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS கருணாநிதி சார்பில் இஸ்லாமிய பெருமக்களுக்கு ரமலான் வாழ்த்துகள்: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS ரஜினி நன்கு படித்தவர்; அவரால் ஆங்கிலத்தில் உரையாற்ற முடியும்: பொன்.ராதா
 • BREAKING-NEWS எம்.பி மற்றும் எம்எல்ஏக்களின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் பயில வேண்டும்:பொன்.ராதா
 • BREAKING-NEWS குளித்தலை: குப்பாச்சிபட்டியில் மணல் லாரிகளை மறித்து பொதுமக்கள் போராட்டம்
 • BREAKING-NEWS ஜிஎஸ்டி வரியால் விலைவாசி உயராது: நிர்மலா சீதாராமன்
 • BREAKING-NEWS அஞ்சுகிராமம் பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மக்கள் போராட்டம்
 • BREAKING-NEWS அஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டனில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்ரீ காந்திற்கு ரூ.5 லட்சம் பரிசு
 • BREAKING-NEWS அறம் தழைத்திட, சமாதானம் நிலவிட அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்து: விஜயகாந்த்
 • BREAKING-NEWS மே 17 இயக்கத்தினர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை முற்றிலும் ஏற்கக் கூடியது அல்ல: விசிக
அறிவியல் & தொழில்நுட்பம் 17 Feb, 2016 05:11 PM

ரூ.251-க்கு கவர்ச்சிகரமான ஸ்மார்ட் போன்: சிறப்பு அம்சங்கள்...

டெல்லி அருகே உள்ள நொய்டாவை சேர்ந்த ரிங்கிங் பெல்ஸ் என்ற நிறுவனம் 251 ரூபாய் விலையிலான ஸ்மார்ட்ஃபோனை அறிமுகப்படுத்தியுள்ளது. ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் இந்த ஃபோனை டெல்லியில் இன்று அறிமுகப்படுத்தினார்.

உலகின் மிகக்குறைந்த விலை ஸ்மார்ட்ஃபோனாக கருதப்படு‌ம் இது இந்திய சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 3ஜி தொழில்நுட்பத்திலான இந்த ஸ்மார்ட்ஃபோன் 4 அங்குல திரை கொண்டதாகும். ஆண்டிராய்டு தளத்தில் இயங்கும் இந்த ஃபோன் ஒரு ஜிபி நினைவகத் திறன் கொண்டது என ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 3.2 மெகா பிக்சல் பின்புற கேமரா, 0.3 மெகா பிக்சல் முன்புற கேமரா இதில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

 
அந்நிறுவனத்தின் வலைத்தளத்தில் “ப்ரீடம் 251”(Freedom 251) ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள்:

4 இண்ச் டிஸ்ப்ளே, 8 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் (32 ஜிபி வரை விரிவுபடுத்தலாம்), 3.2 மெகாபிக்சல் பின்பக்க கேமரா, 0.3 மெகாபிக்சல் முன்பக்க கேமரா, 1450 mAh பேட்டரி..

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள “ரிங்கிங் பெல்ஸ்” நிறுவனம், இந்த ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த மத்திய அரசு உறுதுணையாக இருந்ததாகவும், இது “மேக் இன் இந்தியா” திட்டத்திற்கு கிடைத்த வெற்றி எனவும் தெரிவித்துள்ளது.

மிகக் குறைவான விலையில் ஸ்மார்ட் போன் விற்பனைக்கு வருவது “டிஜிட்டல் இந்தியா” கனவை முன்னெடுத்துச் செல்லும்.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads