[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

தூங்கும் இணைய வேகம்... பணமில்லா பரிமாற்றத்தை நோக்கி இந்தியா..!

india-has-low-cyber-security-bandwidth

இந்தியாவில் கருப்புப்பண ஒழிப்பை அடுத்து பணமில்லா பரிமாற்றத்தை நோக்கி நாடு நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறது. ஆனால் இங்குள்ள இணையத்தின் வேகம் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது மந்த நிலையிலே உள்ளது.

கருப்புப்பண வேட்டையில் இறங்கியுள்ள மத்திய அரசு நாட்டில் டிஜிட்டல் பரிமாற்றங்களை ஊக்குவித்து வருகின்றன. இதனால் கிராமங்களில் உள்ள சிறு நியாய விலை கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை பணமில்லா பரிமாற்ற பாதையை நோக்கி பயணித்து வருகிறது. ஆனால் டிஜிட்டல் பரிமாற்றத்திற்குத் தேவையான இணைய சேவையில் போதிய வேகம் இல்லை. உலக அளவில் இணையதளத்திற்கான வேகத்தில் இந்தியா, 96- வது இடத்தில் உள்ளது.

இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகள் இந்த வேகத்தில் இந்தியாவைவிட முன்னிலையில் உள்ளன. இலங்கை, சீனா, தென் கொரியா, இந்தோனேஷியா, மலேசியா உட்பட பல நாடுகள் பாதுகாப்பு விஷயத்தில் இந்தியாவை விட பலமடங்கு முன்னிலையில் உள்ளன.

இணைய வேகத்தில் இந்தியா டவுன்லோட் சேவையில் 96- வது இடத்திலும், பேண்ட்வித் சேவையில் 105- வது இடத்திலும் உள்ளது.
பணமில்லா பரிமாற்றத்தில் ஏற்கனவே வங்கிகளின் ரகசிய தகவல்கள் திருடப்பட்டு, சைபர் குற்றங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே பாதுகாப்பும் இணைய வேகமும் இல்லாத இந்த பணமில்லா பரிமாற்றம் இந்தியாவில் எந்த அளவிற்கு சாத்தியமாகும் எனக் கேள்வி எழுந்துள்ளது. இந்தப் பிரச்னைகளை மத்திய அரசு முழுமையாக சரி செய்யும் பட்சத்தில் மட்டுமே பணமில்லா பரிமாற்றம் முழுமையான முறையில் சாத்தியமாகும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close