[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு
  • BREAKING-NEWS சர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு
  • BREAKING-NEWS வரும் 29-ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச

நியூ இயர் விற்பனையாக களமிறங்கும் கவாஸாகியின் புதிய மாடல்கள்..!

2017-kawasaki-kx100-and-kx250f-launched-in-india

இந்தியாவில் பல இளைஞர்களின் கனவு பைக்காக வலம்வரும் கவாஸாகி ரேஸ் பைக் கேஎக்ஸ்100 மற்றும் கேஎக்ஸ்250எஃப் ஆகிய இரு பைக்களை ஆஃப் ரோடு மோட்டோ க்ராஸ் மாடல்களாக நியூ இயர் சிறப்பு விற்பனைக்கு இந்தியாவில் களமிறக்கியுள்ளது.

கவாஸாகி கேஎக்ஸ்100 மோட்டோ க்ராஸ் மாடலில் 99சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் முன்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள 36 மிமீ இன்வெர்டேட் ஃபோர்க் அப் 275 மிமீ நீளம் வரை பயணிக்கும் திறனுடையது. பின்புறத்தில் யுனி-டிராக் மோனோ ஷாக் அட்ஜெஸ்ட்பிள் அப்சார்பர் பொருத்தப்பட்டுள்ளது. இதன் எடை 77 கிலோ கிராம் ஆகும். கேஎக்ஸ்100- ன் விலை ரூ.4.68 லட்சம் ஆகும்.

கவாஸாகி கேஎக்ஸ்250எஃப் மோட்டோ க்ராஸ் மாடலில் 249சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. கேஎக்ஸ்250எஃப் பைக்கில் முன்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள Showa’s SFF fork 310 மிமீ நீளம் வரை பயணிக்கும் திறனுடையது. பின்புறத்தில் யுனி-டிராக் லிங்கேஜ் மோனோ ஷாக் அட்ஜெஸ்ட்பிள் அப்சார்பர் பொருத்தப்பட்டு 310 மிமீ வரை பயணிக்கும் திறனை கொண்டதாகும். இந்த பைக்கின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 330 மீமீ ஆகும். இதன் மொத்த எடை 107 கிலோ கிராம் ஆகும். கேஎக்ஸ்250எஃப்- ன் விலை ரூ. 7.14 லட்சம்.

கவாஸாகி கேஎக்ஸ்100 மற்றும் கேஎக்ஸ்250எஃப் இரண்டு பைக்களும் பொது போக்குவரத்து சாலையில் இயக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. மூடப்பட்ட தனி டிராக்குகளில் மட்டுமே ஓட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த பைக்குகளுக்கு ஆர்டிஓ பதிவுக்கட்டணம், வரி போன்றவை செலுத்த தேவையில்லை. நியூ இயர் முதல் இந்த இரண்டு பைக்குகளையும் கவாஸாகி டீலர் நெட்வொர்க் இருந்து வாங்கி கொள்ளலாம்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close