[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

உங்கள் மொபைல் வேலட் பாதுகாப்பானதா?..

none-of-mobile-payment-apps-in-india-fully-secure-qualcomm

இந்தியாவில் இருக்கும் எந்தவொரு மொபைல் வேலட்டும் பாதுகாப்பானது இல்லை என்று மொபைல்போன் சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள குவால்கோம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட குவால்கோம் நிறுவனத்தின் மூத்த இயக்குனர்களில் ஒருவரான எஸ்.ஒய்.சவுத்ரி இதுகுறித்து கூறுகையில், இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் பயன்பாட்டில் உள்ள மொபைல் வேலட்டுகள் மற்றும் வங்கிகளின் மொபைல் அப்ளிகேஷன்கள் போன்றவை ஹார்ட்வேர் எனப்படும் வன்பொருள் வரையிலான பாதுகாப்பில் கவனம் செலுத்துவதில்லை. அவை அனைத்தும் சாப்ட்வேர் எனப்படும் மென்பொருள் பாதுகாப்பிலேயே கவனம் செலுத்துகின்றன. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டே இதுபோன்ற பெரும்பாலான மொபைல் வேலட்டுகள் இயங்குகின்றன. இதனால் வாடிக்கையாளர்களின் கடவுச் சொல் உள்ளிட்ட பாதுகாப்பு குறித்த தகவல்கள் திருடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. மொபைல் பேங்கிங் எனப்படும் செல்போன்கள் மூலம் செய்யப்படும் பணபரிவர்த்தனைகளைப் பாதுகாப்பான முறையில் மேற்கொள்ளும் வகையிலான புதிய பாதுகாப்பு அம்சத்தினை குவால்கோம் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதில் மொபைல் பேங்கிங் உள்ளிட்ட தகவல்களைப் பாதுகாக்கும் அம்சங்கள் மென்பொருளான இயங்குதளத்தில் மட்டுமல்லாது சிப் லெவல் எனப்படும் வன்பொருளிலும் இடம் பெற்றுள்ளது என அவர் தெரிவித்தார். மத்திய அரசின் ஆதார் திட்டத்தைப் பாராட்டிய சவுத்ரி, உலக அளவில் டிஜிட்டல் முறைக்கு மாறும் பல்வேறு நாடுகளை விட இந்தியா முன்னோக்கி செல்வதாகவும் கூறினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close