[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

காகிதத்தில் உருவாக்கப்பட்டுள்ள 'ஃபோல்ட் ஸ்கோப்' நுண்ணோக்கி..!

foldscope-origami-paper-microscope

சாதாரணமாகப் பார்த்தால் நம் கண்ணுக்குப் புலப்படாத பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளை பெரிதாகக் காட்ட உதவும் கருவி நுண்ணோக்கி. பல ஆய்வு கூடங்களில் பயன்படுத்தப்படும் இந்த நுண்ணோக்கி தற்போது காகிதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

‘ஃபோல்ட் ஸ்கோப்’ எனப்படும் இந்த நுண்ணோக்கியை கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் உயிரியல் பொறியியல் ஆசிரியரான மனு பிரகாஷ் என்பவர் வடிவமைத்துள்ளார். இது காகிதத்தில் உருவாக்கப்பட்டுள்ளதால் மிக குறைவான விலையில் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. இதன் விலை 15 அமெரிக்க டாலர்கள்.

ஃபோல்ட் ஸ்கோப்பை தனித்தனியாக பிரித்து, வெறும் பத்து நிமிடங்கள் சேர்த்து விட முடியும். எனவே இதனை எங்கு வேண்டுமானாலும் கையோடு எடுத்துச் செல்லலாம் என்கிறார் மனு பிரகாஷ்.

இந்த ஃபோல்ட் ஸ்கோப்பில் ஒளியை உமிழக்கூடிய டையோடு, எல்.இ.டி விளக்குகள் உள்ளன. மேலும் லென்ஸ் ஒன்றும் இதனுள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த ஃபோல்ட் ஸ்கோப்பிற்கு மனு பிரகாஷ் காப்புரிமை வாங்கியுள்ளார். இந்த ஆண்டு மட்டும் சுமார் 50,000 போல்ட் ஸ்கோப் நுண்ணோக்கி விற்பனையாகியுள்ளது இதுவே தனக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்கிறார் மனு பிரகாஷ்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close