[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங் சந்திக்கவுள்ள மாமல்லபுரத்தில் சீன அதிகாரிகள் ஆய்வு
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்டம் விவகாரத்தில் தேடப்பட்டு வரும் மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் மனு
  • BREAKING-NEWS சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்பு. பொறுப்பு தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம்.
  • BREAKING-NEWS 7 நாள் பயணமாக அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி

பிஎஸ்ஐவி என்ஜினுடன் புத்தாண்டில் களமிறங்குகிறது பஜாஜ் பல்சர் 135 எல்எஸ், 150,180 மாடல்கள்..!

2017-bajaj-pulsar-180-150-135-ls-launched-with-bsiv-engines

மேம்படுத்தப்பட்ட தரத்துடன், பிஎஸ்ஐவி என்ஜினுடன் 2017- ஆம் ஆண்டில் பஜாஜ் பல்சர் 180, 150 மற்றும் 135 எல்எஸ் ஆகிய மாடல்கள் களமிறங்க உள்ளது. இதன் சிறப்பம்சங்களை காண்போம்.

பல்சர் 135 எல்எஸ்..

* பல்சர் 135 எல்எஸ்பைக் பிஎஸ்4 என்ஜின் மற்றும் லேசர் எட்ஜ்டு கிராபிக்ஸ் நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
* சிவப்பு, கருப்பு, நீலம் மற்றும் வெள்ளை போன்ற வண்ணங்களில் கிடைக்கிறது.
* டிரம் பிரேக்கள் பொறுத்தப்பட்டுள்ளன.
* இருக்கையின் அமைப்பில் மேம்பாடு பெற்று நெடுந்தொலைவு பயணத்துக்கு ஏற்றதாக சிறப்பான தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

பல்சர் 180 பைக்...

* பல்சர் 180 பைக் பிஎஸ்4 என்ஜின் மற்றும் லேசர் எட்ஜ்டு கிராபிக்ஸ் நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
* நெடுந்தொலைவு பயணத்துக்கு ஏற்ற வகையில் இருக்கை அமைப்பில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.
* 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
* பஜாஜ் பல்சர் 180 பைக் விலை ரூ. 81,086.
* முன்பக்க டயரில் 240மிமீ டிஸ்க் மற்றும் பின்பக்க டயரில் 230மிமீ டிஸ்க் பிரேக் இடம்பெற்றுள்ளது. முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்பக்கத்தில் நைட்ராக்ஸ் சாக் அப்சார்பர் அமைக்கப்பட்டுள்ளது.

பல்சர் 150 பைக்..

* பல்சர் 150 பைக்கில் பிஎஸ்3 என்ஜின் மற்றும் லேசர் எட்ஜ்டு கிராபிக்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
* இதன் விலை ரூ. 75,284.
* இன்ஸ்டுரூமென்ட் கிளஸ்ட்டர் டிசைன் மற்றும் இருக்கையின் அமைப்பில் மேம்பாடு பெற்று நெடுந்தொலைவு பயணத்துக்கு ஏற்றதாக அமைக்கப்பட்டுள்ளது.
* 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
* முன்பக்க டயரில் 240மிமீ டிஸ்க் மற்றும் பின்பக்க டயரில் 130மிமீ டிரம் பிரேக் இடம்பெற்றுள்ளது. முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்பக்கத்தில் நைட்ராக்ஸ் சாக் அப்சார்பர் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close