[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

மொபைல் பிரியர்களின் ரசனைக்கேற்ப பானாசோனிக் பி77...!

panasonic-p77-smartphone-with-4g-volte-launched-in-india

இந்திய சந்தைகளில் முக்கிய அங்கம் வகிக்கும் பானசோனிக் நிறுவனம் தற்போது ‘பானாசோனிக் பி77’ என்ற புதிய மாடல் மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை பிளிப்கார்ட்டில் ரூ. 5.299 க்கு கிடைக்கும் என அதிகாரபூர்வமாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பானாசோனிக் பி77 மாடல் கைபேசியின் முக்கிய அம்சங்கள்

* 5-அங்குல வடிவத்தில் முழு எச்டி திறனுடன் ‘பானாசோனிக் பி77’ உருவாக்கப்பட்டுள்ளது.

* இந்த மாடலில் 1 ஜிபி ரேம், 8ஜிபி இன்டெர்னல் மெமரி திறன் கொண்டது அதை மைக்ரோ அட்டை மூலம் 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு வசதியும் உள்ளது.

* அண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளத்தில் இந்த மாடல் மொபைல் இயக்கப்படுகிறது.

* எல்இடி ப்ளாஷ் தொழிநுட்பத்துடன் 8 மெகாபிக்சல் பின்புற கேமரா வசதியும், முன்புறத்தில் 2 மெகாபிக்சல் கேமரா வசதியுடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

* 2,000மி. ஆம்பியர் திறன் கொண்ட பேட்டரி தரத்துடன் நேர்த்தியாகவும் அழகாகவும் பானாசோனிக் பி77 வடிவமைக்கபட்டுள்ளது.

* மேலும் இதில் 4 ஜி தொழிநுட்பம், ஜிபிஎஸ், ப்ளூடூத் மற்றும் வைஃபை உள்ளிட்ட சமீபத்திய தொழில்நுட்பங்கள் அனைத்தும் இதில் அமைந்துள்ளது.

* சாம்பல் மற்றும் வெள்ளை நிறங்களில் இந்த வகை மாடல் செல்போன் கிடைக்கிறது.

ஆக்சிஸ் வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் முன்பதிவு செய்பவருக்கு 10% தள்ளுபடியுடன் ‘பானாசோனிக் பி77’ கிடைக்கும் என ப்ளிப்கார்ட் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close