[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்தார் பி.வி.சிந்து.
  • BREAKING-NEWS வேதாரண்யத்தில் இரண்டு தரப்பினரிடையே மோதல்: காவல்நிலையம் மீது கல்வீச்சு
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் கங்கையம்மன் கோயில் குளத்தில் கிடந்த மர்மப் பொருள் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு.
  • BREAKING-NEWS தமிழகத்தில் எந்த விதத்திலும் தீவிரவாதம் தலைதூக்க முடியாது: ஜெயக்குமார்
  • BREAKING-NEWS அருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்

பூமியை ஆய்வு செய்யும் செயற்கைக்கோள்.... டிசம்பர் 7- ஆம் தேதி ஏவப்படுகிறது

isro-to-launch-earth-observation-satellite-resourcesat-2a-on-dec-7

பூமியை ஆய்வு செய்யும் செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி – 36 ராக்கெட் வருகின்ற 7- ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோளுக்கு ரிசோர்ஸ்சாட்-2ஏ ஏன பெயரிடப்பட்டுள்ளது.

ரிசோர்ஸ்சாட் – 2ஏ எனும் செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி – 36 ராக்கெட் மூலம் டிசம்பர் 7- ஆம் தேதி காலை 10.24 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது. இந்த செயற்கைக்கோள் 1235 கிலோ எடையுள்ளதாகும். 18 நிமிடங்களுக்கு பிறகு செயற்கைக்கோளானது 817 கிமீ தொலைவில் சூரியனின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ரிசோர்ஸ்சாட் – 2ஏ செயற்கைக்கோள் ரிமோட் சென்சிங் செயற்கோளாகும். பூமியின் மூன்று அடுக்குகளையும் படம் பிடிக்க இதில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, 200 ஜிபி அளவுள்ள ரெக்கார்டரும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ரெக்கார்டில் கேமராவில் பிடிக்கப்படும் புகைப்படங்கள் பதிவு செய்யப்படுகிறது என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close