[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

ரிலையன்ஸ் ஜியோவின் புத்தாண்டு சலுகையின் பயன்கள்

jio-web-service-benefits-available-to-old-and-new-customers

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் புதிய அறிவிப்புகளால் அதன் பழைய மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கக்கூடிய பயன்கள் என்ன என்பதைப் பார்க்கலாம்.

புத்தாண்டுச் சலுகை என்ற பெயரில் டிசம்பர் 4ஆம் தேதி முதல் ஜியோ சிம் வாங்கும் புதிய வாடிக்கையாளர்களுக்கு இலவச சலுகைகள் கிடைக்கும். வாய்ஸ், டேட்டா, வீடியோ மட்டுமின்றி ஜியோ ஆப்-களின் அனைத்து சேவைகளும் இலவசம். ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்கள் டிசம்பர் 31ம் தேதி வரை இலவச சலுகைகளைப் பெறுவதுடன், ஜனவரி ஒன்றாம் தேதி முதல் தானாக புத்தாண்டுச் சலுகைகக்கு மாற்றப்படுவார்கள். இதற்காக புதிய சிம் கார்டு வாங்கத் தேவையில்லை.

பழைய வாடிக்கையாளர்களும் மார்ச் 31ம் தேதி வரை இப்போது பெறும் அனைத்து சேவைகளையும் இலவசமாகப் பெறலாம். 80 சதவிகித வாடிக்கையாளர்கள் தினசரி ஒரு ஜிகாபைட் என்ற அளவில் இணைய தள சேவையைப் பயன்படுத்துகின்றனர். இலவச சேவை என்பதால் மற்ற 20 சதவிகித வாடிக்கையாள‌ர்கள் அதிகமாக பயன்படுத்துவதால், சுமார் 8 சதவிகிதம் பேருக்கு இணையதள சேவை தாமதம் ஆவதாக கூறப்படுகிறது. இதுபோன்ற பாதிப்பைத் தவிர்க்க, புத்தாண்டு சலுகையின் கீழ் தினசரி ஒரு ஜிகாபைட் வரை அதிவேகத்திலும், அதன் பிறகு குறைந்த வேகத்திலும் இணைய தள சேவை இலவசமாக அளிக்கப்படும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close