[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

நூறு நாட்களுக்குள் 5 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்ற ஜியோ

jio-crosses-50-million-subscriber-mark-in-83-days

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவை பெற்ற சந்தாதார‌ர்கள் எண்ணிக்கை 5 கோடியை கடந்துள்ளது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ என்ற பெயரில் 4ஜி தொலைதொடர்பு சேவையைக் கடந்த செப்டம்பர் 5ம் தேதி தொடங்கியது. இந்தநிலையில் ஜியோ 4ஜி சேவை தொடங்கப்பட்டு 83 நாட்களில் 5 கோடி வாடிக்கையாளர்கள் என்ற எண்ணிக்கையக் கடந்து சாதனை படைத்துள்ளதாக அந்த நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உலகின் தொடர்ந்து வேகமாக வளரும் நிறுவனமாக ஜியோ நிறுவனம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர்‌ 5ம்தேதியில் இருந்து ஒவ்வொரு நாளும் 6 லட்சம் வாடிக்கையாளர்கள் பெற்றதாகவும், ஒரு நிமிடத்துக்கு ஆயிரம் வாடிக்கையாளர்கள் பெற்றதாகவும் ஜியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ நிறுவனம் 4ஜி சேவையை டிசம்பர் 31வரை வாடிக்கையாளர்கள் கட்டணமில்லாமல் பெறலாம் என்று கூறப்பட்டிருந்தது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close