[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி

பைக் பிரியர்களின் ரசனைக்கேற்ப டி.வி.எஸ் நிறுவனத்தின் 'அகுலா 310' பைக்...!

tvs-akula-310-launch-in-march-2017

இந்தியாவின் முன்னணி பைக் தயாரிப்பு நிறுவனமான டி.வி.எஸ், ‘அகுலா 310’ எனும் புதிய மாடல் பைக்கை சந்தையில் 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் களமிறக்கவுள்ளது.

பைக் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் டி.வி.எஸ் நிறுவனமும், பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபிள்யூ நிறுவனமும் இணைந்து ‘அகுலா 310’ எனும் ஸ்மார்ட் பைக்கை உருவாக்கியுள்ளனர். இந்த பைக்கில் பயன்படுத்தபட்டுள்ள அனைத்து உதிரிபாகங்களும் டி.வி.எஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. ஆனால் இன்ஜின் மட்டும் பி.எம்.டபிள்யூ நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் இது ஒரு ரேஸ் அல்லது ஸ்போர்ட்ஸ் பைக் ஆகும். இதனுடைய விலை சுமார் 2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

டி.வி.எஸ் நிறுவனத்தின் பிரபல இருசக்கர வாகன ரகமான அப்பாச்சியின் அடுத்த வாரிசாக ‘அகுலா 310’ விற்பனைக்கு வர உள்ளது. மேலும் இதில் மெக்லின் டயர்கள் மற்றும் இரட்டை சேனல் ஏபிஎஸ் (ஆன்டி- லாக் பிரேக்கிங் சிஸ்டம்), 17 அங்குல சக்கரங்கள் போன்ற அனைத்து அம்சங்களும் கொண்டு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இளைஞர்களின் கனவு ரேஸ் பைக்கான கேடிஎம், பெனேல்லி டொர்னாடோ வரிசையில் அகுலா 310 இடம்பெரும் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close