JUST IN
 • BREAKING-NEWS மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி
 • BREAKING-NEWS என் நாடிநரம்பில் ஓடுவதெல்லாம் கண்ணதாசனின் வரிகள் : இளையராஜா
 • BREAKING-NEWS எதிர்ப்புகள் வந்தால்தான் அரசியலில் ரஜினியால் சிறந்து விளங்க முடியும்: குருமூர்த்தி
 • BREAKING-NEWS அசாம்: கவுகாத்தியில் ரூ.2கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்
 • BREAKING-NEWS இந்தியிலும் பாஸ்போர்ட் என்பதை திரும்பப்பெற வேண்டும்: ஸ்டாலின்
 • BREAKING-NEWS ஸ்டாலின் முதல்வராகிவிடுவார் என்ற பயத்தில் ரஜினியை முன்னெடுக்கிறது பாஜக : சீமான்
 • BREAKING-NEWS உலக ஹாக்கி லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்திய அணி
 • BREAKING-NEWS சசிகலா கூறியதால் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு: டிடிவி தினகரன்
 • BREAKING-NEWS நீட் தேர்வில் விலக்கு வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது: விஜயபாஸ்கர்
 • BREAKING-NEWS மகாராஷ்ட்ராவில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மாநில அரசு முடிவு
 • BREAKING-NEWS இலங்கை கடற்படையால் கைதான 8 தமிழக மீனவர்களுக்கு ஜூலை 7 வரை காவல்
 • BREAKING-NEWS நீட் தேர்வால் குழப்பமான கல்வி சூழல் உருவாகியுள்ளது: பிரின்ஸ் கஜேந்திரபாபு
 • BREAKING-NEWS உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு அஞ்சுகிறது: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் மசோதா நிறைவேற்றம்
அறிவியல் & தொழில்நுட்பம் 26 Nov, 2016 10:21 AM

ஹெச்.டி.சியின் 'டிசைர் 10 ப்ரோ' இந்தியாவில் அறிமுகம்..!

Cinque Terre

பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹெச்.டி.சி நிறுவனம் “டிசைர் 10” என்னும் மாடலை கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்டது. இதனை தொடர்ந்து தற்போது ‘டிசைர் 10 ப்ரோ’ எனும் புதிய மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. ஹெச்.டி.சி-யின் இந்த புதிய மாடல் வரும் டிசம்பர் 15-ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ. 26,490 என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘டிசைர் 10 ப்ரோ’ வின் அதிரடி அம்சங்கள்..

* 5.5 அங்குல ஹெச்.டி திரை, 1.8GHz ஆக்டா கோர் மீடியா டெக் ஹீலியோபி 10 பிராசசர் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
* டிசைர் 10 புரோ இந்தியாவில் ஸ்டோன் பிளாக், ராயல் ப்ளூ, மற்றும் போலார் வெள்ளை, பிஸ்தா கிரீன் போன்ற வண்ணங்களில் கிடைக்கும்.
* 7.8mm தடிமனுடன், 165 கிராம் எடையில் நேர்த்தியாகவும் ஸ்லிமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
* இரட்டை நானோ சிம், 3,000 மி ஆம்பியர் திறன் கொண்ட பேட்டரி, 4 ஜிபி RAM மற்றும் 64 ஜிபி இன்டர்னல் மெமெரியுடன் வெளிவரவுள்ளது.
* கைரேகை சென்சார் தொழில்நுட்பமும், எல்இடி ப்ளாஷ் மற்றும் லேசர் ஆட்டோ ஃபோகஸ் தொழில்நுட்பத்துடன் 20 எம்.பி பின்புற கேமிரா, செல்ஃபி பிரியர்களுக்கு ஏற்றவாறு 13 மெகாபிக்சல் முன்புற கேமிரா பொருத்தப்பட்டுள்ளது.
* பூம்சவுண்ட் ஒலி தொழில்நுட்பம், பி.எஸ்.ஐ சென்சார் நுட்பங்களும் கூடுதலாக டிசைர் 10 ப்ரோவில் இணைக்கப்பட்டுள்ளது.
* ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மாலோ இயங்குதளத்தில் இந்த மொபைல் செயல்படும்.
* மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 4ஜி தொழில்நுட்பம், ஜிபிஎஸ், மைக்ரோ-யூ.எஸ்.பி 2.0, ப்ளூடூத் 4.0, வைஃபை ஆகிய சிறப்பம்சங்களுடன் விரைவில் களமிறங்கவுள்ளது.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads