[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கொள்ளை வழக்கில் மேலும் 6 கிலோ நகை சிக்கியது
  • BREAKING-NEWS அயோத்தியில் டிசம்பர் 10-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு

மிக சிறிய 'விர்கோ' செயற்கைக்கோள் விண்மீன் கண்டுபிடிப்பு...!

faintest-satellite-galaxy-of-milky-way-discovered

ஜப்பான் நாட்டை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பால்வெளியில் மிக சிறிய செயற்கைகோள் விண்மீன் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

ஜப்பானில் உள்ள டோஹோகு பல்கலைக் கழக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மிக சிறிய செயற்கைகோள் விண்மீன் ஒன்றை பால்வெளியில் கண்டுபிடித்துள்ளனர். இதுவரை கண்டுப்பிடிக்கப்பட்ட செயற்கைக்கோள்களில் மிகவும் சிறியது இதுதான் என கூறப்படுகிறது. இந்த செயற்கைகோளுக்கு ‘விர்கோ’ என்று பெயரிட்டுள்ளனர். இதுபோன்று பால்வெளியில் 50 விண்மீன் செயற்கைக்கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட விண்மீன் செயற்கைக்கோளில் 40 விண்மீன் திரள்கள் மங்கலாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதில், ‘விர்கோ’ தான் மிக சிறிய விண்மீன் செயற்கைகோள் எனவும், அதன் ஒளிப்பிறக்க அளவு மைனஸ் 0.8 எனவும் ஆய்வாளர் ஹோம்மா கூறியுள்ளார். விர்கோ சூரியனில் இருந்து 280,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close