[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மதுரை மக்களவை தொகுதியில் இரவு 8 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது
  • BREAKING-NEWS அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினர் இடையே மோதல்; வீடுகள் வாகனங்கள் நொறுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் குவிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மதுரை மக்களவை தொகுதியை தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் பழுதான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற வேண்டும்; வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதால் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்கவும் கோரிக்கை - தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்
  • BREAKING-NEWS பெரம்பலூர் தொகுதியில் உள்ள வெங்கலம் அரசு தொடக்க பள்ளி வாக்குச் சாவடியில் அதிமுகவினர் குடிபோதையில் ரகளை என புகார்
  • BREAKING-NEWS தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி வெறும் 4.86% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன

மங்கள்யானின் ஆயுட்காலத்தை அதிகரிக்க திட்டம்.. மயில்சாமி அண்ணாதுரை

mangalyaan-service-to-be-extended

மங்கள்யானின் ஆயுட்காலத்தை அதிகரிக்க இருப்பதாக அதன் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் ஏவப்பட்ட செயற்கைக்கோள் ‘மங்கள்யான்’. பி.எஸ்.எல்.வி. சி-25 ராக்கெட் மூலம் நவம்பர் 5, 2013 அன்று ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து இந்திய நேரப்படி பிற்பகல் 02:38 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. தற்போது, செவ்வாய் கிரக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள மங்கள்யான் செயற்கைக்கோள், வண்ணப் புகைப்படங்களை எடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வருகிறது.

இந்நிலையில் தற்போது, மங்கள்யானின் ஆயுட்காலத்தை அதிகரிக்க தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதன் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதி நவீன தொழில் நுட்பம் மூலம் சந்திரனில் ரோபோ வாகனத்தை இறக்கி ஆராய்ச்சி செய்ய இருப்பதாகவும், அதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறியுள்ளார்.

சோவியத், அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றிக்கு அடுத்ததாக செவ்வாய்க்கு செயற்கைக்கோள் அனுப்பிய பெருமையை இந்தியா பெற்றது. உலகிலேயே குறைந்த செலவில் செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள் திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close