[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

சாம்சங்கைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் சோனி..

accusation-on-sony-smartphones

ஜப்பானைச் சேர்ந்த முன்னணி மின்னணு பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான சோனி மீது சீனாவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கனடாவைச் சேர்ந்‌த வைலேன் இங்க் என்ற நிறுவனம், தங்களது ஸ்மார்ட்ஃபோன் தொழில்நுட்பத்தை காப்புரிமையை மீறி சோனி பயன்படுத்தியுள்ளதாக சீன நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

4ஜி தொழில்நுட்பத்திலான ஸ்மார்ட்ஃபோன்களை சோனி விற்பனை செய்ய தடை விதிக்குமாறு மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் விசாரணைக்கு வரவுள்ள இந்த வழக்கில் வைலேன் இங்க் நிறுவனத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானால், 4ஜி தொழில்நுட்ப ஸ்மார்ட்ஃபோன்களை சோனி நிறுவனம் சீனாவில் விற்க முடியாத நிலை ஏற்படக்கூடும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close