[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

பெயின்ட் மென்பொருளில் '3டி'... மைக்ரோசாப்ட் அறிமுகம்..!

microsoft-s-paint-3d-has-arrived-but-only-for-windows

பிரபலமான பன்னாட்டு மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் தற்போது ‘பெயின்ட் 3டி’ என்னும் புதிய மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளது.

3டி அனிமேஷன் என்று சொல்லகூடிய முப்பரிமாண படங்கள் மற்றும் ஓவியங்கள் தற்போது நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தொழில்நுட்பத்தில் பல உத்திகளை பயன்படுத்தி பெயின்ட் மென்பொருளில் 3டி நுட்பத்தினை புகுத்தி புதிதாக பெயின்ட் 3டி’ என்ற மென்பொருளை கண்டுபிடித்துள்ளனர். இந்த வகை ‘பெயின்ட் 3டி’ தொழிநுட்பம் விண்டோஸ் 10 இயங்குதளத்தில் இயங்கக்கூடியது.

‘பெயின்ட் 3டி’ யின் சிறப்பம்சங்கள்

பெயின்ட் 3டி தொழிநுட்பம் மூலம் இரு பரிமாண படங்கள் மற்றும் ஓவியங்களை முப்பரிமாணத்திற்கு மாற்ற இயலும். மேலும் கணினிகளில் மட்டுமின்றி, தொடுதிரையிலும் இதனை கையாளும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் 3டி பெயின்ட்டில் முப்பரிமாணத்தில் படங்கள், புதிய பொருட்களின் வடிவ மாதிரிகள்( கிராபிக்ஸ் இமேஜ்) போன்றவற்றை எளிதில் உருவாக்க இயலும். அதுமட்டுமின்றி, இதில் படங்களில் எடிட்டிங் செய்யவும், புதிதாக படங்களை இணைக்கவும் முடியும்.

பெயின்ட் 3டி தொழிநுட்பத்தின் மூலம் முப்பரிமாண படங்களை 360 டிகிரி கோணத்தில் பார்க்க இயலும். இதன் மூலம் சில வரைபடங்களை துல்லியமாக பார்க்க இயலும். பெயின்ட் 3டி ஸ்கிரீனில் வலது பக்கத்தில் ஒரு டூல்பார் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள டூல் லிஸ்டில் கருவிகள், ஸ்டிக்கர்கள் போன்ற பல ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

விண்டோஸ் இயங்குதளத்தில் மட்டுமின்றி, மைக்ரோசாப்டின் ‘ஹோலோலென்ஸ்’ மற்றும் பேஸ்புக்கின் ‘ஆக்குலஸ்’ போன்ற இயங்குதளத்திலும் பெயின்ட் 3டி மென்பொருளை பயன்படுத்த முடியும். மேலும் முப்பரிமாணத்தில் உள்ள ஏதேனும் ஒரு பொருளை ஸ்கேன் செய்து அந்த கோப்பினை 3டி பெயின்டில் பயன்படுத்த முடியும். இனி சாதாரண பெயின்ட் மென்பொருள் மூலம் அனிமேஷனையே எளிதாக கொண்டுவரலாம்..!

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close