[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய பேட்டரி கீபோர்டு...!

microsoft-surface-ergonomic-keyboard-surface-keyboard-and-new-type-covers-launched

மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது புதிய ரக வகை கீபோர்டை அறிமுகப்படுத்தியுள்ளது. வயர்லஸ் வசதியுடன் பேட்டரி மூலம் இயங்கக்கூடிய இந்த புதிய ரக கீபோர்டு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ரக கீபோர்டுகள் ஏஏஏ வகை பேட்டரிகள் மூலம் இயக்கப்படுகிறது. இதன் விலை ரூ. 8,700 ஆகும். மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த புதிய கீபோர்டு தயாரிப்புக்கு ஒரு ஆண்டு வரை உத்தரவாதம் வழங்குகிறது. மிகவும் ஸ்டைலிஷாக வடிவமைக்கபட்ட இந்த கீபோர்டு சாம்பல் நிறத்தில் கிடைக்கிறது. இது 460.14x229.22x34.73 mm அளவில் நேர்த்தியான திறனுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் எடை 1,012 கிராம் மட்டுமே..!

ப்ளூடூத் வசதியுடன் இயங்ககூடிய கணினிகளில் இந்த கீபோர்டை 50 அடிகள் தூரத்தில் வைத்து கூட பயன்படுத்த முடியும். இது ஒரு ரிமோட் போன்று செயல்படுத்தப்படுகிறது. சாதாரண கீபோர்டை விட சற்று உயரமாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் டைப் செய்வதற்கு மிகவும் வசதியாக உள்ளது. ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் ஓஎஸ் ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட் போன்ற தொழிநுட்பம் கொண்ட கருவிகளில் இந்த கீபோர்டை பொருத்தி பயன்படுத்தலாம்.

மேலும், விண்டோஸ் 8, விண்டோஸ் 10 வகை ஒ.எஸ் மற்றும் மேக் ஒ.எஸ் வி10.10.5 / 10.11.1 / 10.11.4 ஆகிய ஒ.எஸ்களில் இந்த கீபோர்டை பயன்படுத்த முடியும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close