[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ பணியிடை நீக்கம் - வாடிகன் நிர்வாகம்
  • BREAKING-NEWS மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு பொது விடுமுறை - புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

பிளாக்பெர்ரி டிடெக் 60 ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வ வெளியீடு

blackberry-finally-launches-dtek60-with-snapdragon-820-4gb-ram

பிளாக்பெர்ரி நிறுவனத்தின் டிடெக்60 ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்னாப்ட்ராகன் 820 ப்ராசஸருடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், 4 ஜிபி ரேம் வசதியுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 32 ஜிபி நினைவுத் திறன், கைரேகை சென்சார், பின்புற கேமிரா 21 மெகாபிக்சல் மற்றும் முன்புற கேமிரா 8 மெகாபிக்சலுடன் பிளாஷ் உள்ளிட்ட வசதிகளுடன் டிடெக் 60 அட்டகாசமாக வெளிவந்துள்ளது.

ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ 6.0 இயங்குதளத்துடன்
வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன். 3,000 மி.ஆ. பேட்டரியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, ப்ளூடூத் 4.20, 3.5 மி.மீ. ஆடியோ ஜாக், மைக்ரோ-யூஎஸ்பி, வைஃபை என ஸ்மார்ட் போனுக்கான அனைத்து வசதிகளும் இந்த ஸ்மார்ட் போனில் உள்ளன.

ஸ்மார்ட்போன்களைச் சொந்தமாகத்
தயாரிப்பதை நிறுத்துவதாக சமீபத்தில் அறிவித்த பிளாக்பெர்ரி, கடைசியாக ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் பிரிவ் எனும் அதிநவீன ஸ்மார்ட்போனைத் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் மற்ற நிறுவனங்களிடமிருந்து அவுட்சோர்சிங் முறையில் பாகங்களைப் பெற்று, அவற்றுக்கு இறுதிவடிவம் கொடுக்கும்
பணியை மட்டுமே பிளாக்பெர்ரி நிறுவனம் மேற்கொள்ளும் என்று தெரிகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close