[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS மேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சாம்சங்கின் அடுத்த அதிரடி...6 ஜிபி ரேம் வசதியுடன் கேலக்ஸி சி-9 ப்ரோ

samsung-s-6gb-ram-smartphone-galaxy-c9-pro-goes-official

கேலக்ஸி நோட் 7 சர்ச்சையில் இருந்து மீண்டெழும் விதமாக சாம்சங் நிறுவனம், கேலக்ஸி சி-9 ப்ரோ எனும் புதிய ரக ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

முதற்கட்டமாக சீனாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட உள்ள சாம்சங் கேலக்ஸி சி-9 ப்ரோ, 6 இன்ச் எச்.டி. தொடுதிரையுடன் வெளிவந்துள்ளது. கேலக்ஸி நோட் 7 மாடலில் உள்ளது போலவே 6ஜிபி ரேம் வசதியுடன் கேலக்ஸி சி-9 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
செல்ஃபி பிரியர்களை மகிழ்விக்கும் வகையில் 16 எம்.பி. முன்பக்க மற்றும் பின்பக்க கேமிராக்கள் பிளாஷ் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கைரேகை சென்சார் பாதுகாப்பு வசதியும் இதில் உள்ளது. ஆன்ட்ராய்டு இயங்குதளத்தின் மார்ஷ்மெல்லோ 6.0 பதிப்புடன் இரண்டு சிம்கார்டுகளைப் பயன்படுத்தும் வசதியுடன் சி-9 ப்ரோ களமிறங்கவுள்ளது. இதன் நினைவுத்திறனை 64 ஜிபி வரை அதிகரித்துக் கொள்ளலாம்.

இன்றைய இணைய பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு சாம்சங் கேலக்ஸி சி-9 ப்ரோ, 4,000மி.ஆம்பியர் திறன் கொண்ட பேட்டரியுடன் வெளிவந்துள்ளது. ப்ளூடூத் 4.2 மற்றும் வைஃபை உள்ளிட்ட சமீபத்திய தொழில்நுட்பங்கள் அனைத்தும் கொண்ட சி-9 ப்ரோ சீனாவில் நவம்பர் 11 முதல் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி சி-9 ப்ரோ மாடல் ஸ்மார்ட் போன்களின் விலை மற்றும் இந்தியாவில் அறிமுகப்படுத்தும் நாள் ஆகியவற்றை சாம்சங் நிறுவனம் இதுவரை அறிவிக்கவில்லை.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close