[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

ரிலையன்சின் அடுத்த அதிரடியாக லைஃப் F1 வெளியீடு

reliance-retail-introduces-special-edition-lyf-f1-in-india

ஜியோ சிம் விற்பனையைத் தொடர்ந்து ரிலையன்ஸ் நிறுவனம் ஸ்மார்ட்ஃபோன் விற்பனையிலும் அதிரடியாக களமிறங்கியுள்ளது. அந்த வரிசையில் ஸ்பெஷல் எடிஷனாக “லைஃப் F1 ” ஸ்மார்ட்ஃபோனை தற்போது ரிலையன்ஸ் வெளியிட்டுள்ளது. மும்பையில் நடைபெற்ற அறிமுக விழாவில் நடிகை ஜெனிலியா “லைஃப் F1 ” ஸ்மார்ட் ஃபோனை வெளியிட்டார்.

ஜியோ சிம் தடையில்லா டேட்டாவை வழங்கி வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் ஜியோ சிம்மை முழுமையாக பயன்படுத்தும் வண்ணம் ரிலையன்ஸ் ஸ்மார்ட் ஃபோன்களையும் வடிவமைத்து வெளியிட்டு வருகின்றது. அந்த வரிசையில் பல சிறப்பம்சங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது “லைஃப் F1”.

“லைஃப் F1 “ஸ்மார்ட் ஃபோனின் விலை 13,399 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் திரை 5.5 அங்குலம் கொண்ட முழுக்க முழுக்க எச்டி மற்றும் 400 பிக்சல் துல்லியம் கொண்ட திரையாகும்.

மேலும் இந்த லைஃப் F1-ல் நம்மால் ஒரு நேனோ சிம் மற்றும் மைக்ரோ சிம் என இரண்டு சிம்களை பொறுத்த முடியும். அதுமட்டுமின்றி 32 ஜிபி மெமரியுடன் வரும் லைஃப் F1-ல் நம்மால் 128 ஜிபி கூடுதல் மெமரி கார்டை இணைத்துக்கொள்ள முடியும் என்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

செல்ஃபி பிரியர்களையும் புகைப்பட பிரியர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் 8 எம்பி முன் கேமராவையும் 16 எம்பி ரியர்(பின்) கேமராவையும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது “லைஃப் F1 “.

தடையின்றி ஜியோ சிம்மை முழுக்க முழுக்க வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் வகையில் நீடித்த பேட்டரியும் லைஃப் F1-ல் வழங்கப்பட்டுள்ளதாக ரிலையன்ஸ் அதிகாரி சுனில் தத் தெரிவித்துள்ளார். அடுத்ததாக அதிகபட்ச விலையான 19,999 ருபாய் மதிப்புள்ள எர்த் 2 என்ற ஸ்மார்ட் ஃபோனை ரிலையன்ஸ் வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close