[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் அமலுக்கு வந்தது புதிய சொத்து வரி!
  • BREAKING-NEWS காஞ்சிபுரத்தில் கனமழையால் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்- விவசாயிகள் வேதனை
  • BREAKING-NEWS மணல் கடத்தலையும், அதில் நேர்மையான அதிகாரிகள் கொல்லப்படுவதையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது- சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் ரகசியமாக நடைபெறும் குட்கா விற்பனை- அதிரடி காட்டிய போலீஸ்!
  • BREAKING-NEWS சென்னையில் விடிய விடிய கனமழை
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

பாதுகாப்பில் அலட்சியம்... பாக். ஆதரவு ஹேக்கர்களின் இலக்காகும் அரசு துறை இணையதளங்கள்

government-sites-sit-defenceless-as-pakistan-steps-up-cyber-attacks

பிகார் மாநில அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை இணையதளம் பாகிஸ்தான் ஆதரவு ஹேக்கர்களால் முடக்கப்பட்டது.

முடக்கப்பட்ட அந்த இணையதளத்தில் பாகிஸ்தான் தேசியக் கொடியுடன், இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

யூரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து நாட்டில் உள்ள மாநில அரசுகள் மற்றும் அரசு துறையின் இணையதளங்களை பாகிஸ்தான் ஆதரவு ஹேக்கர்கள் முடக்குவது அதிகரித்துள்ளது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் இணையதளம் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட அரசு துறை இணையதளங்கள் பாகிஸ்தான் ஆதரவு ஹேக்கர்களால் இதுவரை முடக்கப்பட்டுள்ளன.

அரசு துறைகளின் இணையதளங்கள் குறைந்தபட்ச பாதுகாப்பு வசதிகள் கூட இல்லாமல் வடிவமைக்கப்படுவதே ஹேக்கர்களின் தாக்குதலுக்கு இலக்காக முக்கியகாரணமாக இருப்பதாக இணையதள பாதுகாப்பு வல்லுனர்கள் கருதுகின்றனர். இதுபோன்ற தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்ள அரசு துறை இணையதளங்களின் பாதுகாப்பை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என்றும் அவர்கள் எச்சரிக்கை மணி அடிக்கின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close