JUST IN
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன 5 மீனவர்கள் மீட்பு
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 6 பேரை ஜூலை 7 வரை வவுனியா சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS நேபாளம், பூடானில் அடையாள அட்டையாக ஆதார் ஏற்கப்படாது: உள்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் கரை திரும்பவில்லை என புகார்
  • BREAKING-NEWS உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு தயாராக உள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
  • BREAKING-NEWS மாணவிகள் தங்களின் பாதுகாப்பிற்காக தற்காப்பு கலைகளை கற்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கருணாநிதி சார்பில் இஸ்லாமிய பெருமக்களுக்கு ரமலான் வாழ்த்துகள்: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ரஜினி நன்கு படித்தவர்; அவரால் ஆங்கிலத்தில் உரையாற்ற முடியும்: பொன்.ராதா
  • BREAKING-NEWS எம்.பி மற்றும் எம்எல்ஏக்களின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் பயில வேண்டும்:பொன்.ராதா
  • BREAKING-NEWS குளித்தலை: குப்பாச்சிபட்டியில் மணல் லாரிகளை மறித்து பொதுமக்கள் போராட்டம்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டி வரியால் விலைவாசி உயராது: நிர்மலா சீதாராமன்
  • BREAKING-NEWS அஞ்சுகிராமம் பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மக்கள் போராட்டம்
  • BREAKING-NEWS அஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டனில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்ரீ காந்திற்கு ரூ.5 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS அறம் தழைத்திட, சமாதானம் நிலவிட அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்து: விஜயகாந்த்
அறிவியல் & தொழில்நுட்பம் 05 Oct, 2016 10:00 AM

15 நிமிட சார்ஜில் 7 மணி நேர பயன்பாடு: ’பிக்ஸல்’ ஸ்மார்ட் போனுடன் களமிறங்கிய கூகுள்

Cinque Terre

இணையதள தேடுபொறியில் உலக அளவில் முதலிடம் வகிக்கும் கூகுள் நிறுவனம் பிக்ஸல் என்ற பெயரில் புதிய மொபைல் போன்களை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள் அறிமுக விழாவான ’மேட் பை கூகுள்’ அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடந்தது. இதில், ஆப்பிளின் ’சிறி’ போன்ற குரல் உதவி செயலியான் கூகுள் அசிஸ்டண்ட் வசதி கொண்ட ’பிக்ஸல்’ ஸ்மார்ட் போன் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், மேம்படுத்தப்பட்ட குரோம்காஸ்ட், கூகுள் ஹோம் என்ற பெயரில் ஸ்பீக்கர்கள், கூகுள் வைஃபை உள்ளிட்ட புதிய தயாரிப்புகளை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

ஸ்மார்ட் போன்களை மையப்படுத்தியே கூகுள் நிறுவனத்தின் அடுத்த நகர்வு இருக்கும் என்ற எதிர்பார்ப்பை பிக்ஸல் ஸ்மார்ட் போன் மூலம் அந்த நிறுவனம் பூர்த்தி செய்துள்ளது. பிக்ஸல் ஸ்மார்ட் போன் வரிசையில் 5 இன்ச் மற்றும் 5.5 இன்ச் என இருவிதான தொடுதிரை அளவுகளுடன் இந்த போன்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், இந்த வகை போன்களை 12.3 மெகா பிக்சல் பின்பக்க கேமிரா, 8 மெகா பிக்சல் முன்பக்க கேமிராவுடனும், 2 ஜிபி ரேம் உடனும் கூகுள் வடிவமத்துள்ளது. அதேபோல, இணையத்தை அதிகளவில் பயன்படுத்தும் இன்றைய தலைமுறை ஸ்மார்ட் போன் பயனாளர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் 2,770 மற்றும் 3,450 மி.ஆம்பியர் திறனுடன் பிக்ஸல் வகை போன்கள் உருவாக்கப்பட்டுள்ளன. யூஎஸ்பி கனெக்டிவிட்டி மற்றும் சிறப்பான ப்ளூடூத் இணைப்பு போன்றவைகள் பயனாளர்களுக்கு புதிய அனுபவத்தைத் தரும் என்று கூகுள் உறுதியளித்துள்ளது. நினைவுத் திறனைப் பொறுத்தவரை 32 ஜிபி மற்றூம் 128 ஜிபி என இரு வேரியண்ட்களில் பிக்ஸல் வெளிவருகிறது.

இந்திய சந்தையில் ரூ.57,000 என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிக்ஸல் வகை போன்களுக்கான முன்பதிவு அக்டோபர் 13 முதல் தொடங்கும் என்று கூகுள் அறிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads