[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரே நேரத்தில் தேர்தல் என்பது எந்த அளவிற்கு சாத்தியம் என தெரியவில்லை; அப்படி நடந்தால் நல்லதுதான்- திருமாவளவன்
  • BREAKING-NEWS 17வது மக்களவையின் இடைக்கால சபாநாயகராக வீரேந்திர குமார் பதவியேற்றார்
  • BREAKING-NEWS ஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு
  • BREAKING-NEWS மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு
  • BREAKING-NEWS நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்

பொதுஇடங்களிலும் இலவச வைஃபை: இந்திய சந்தையைக் குறிவைக்கும் கூகுள்

google-stations-for-wifi-youtube-go-app-the-search-giant-s-big-plans-for-india

ரயில் நிலையங்களைத் தொடர்ந்து வணிக வளாகங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் இலவச வைஃபை சேவையை வழங்க கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இணையதள தேடுபொறியில் முன்னணி வகிக்கும் கூகுள் நிறுவனத்தின் 18ஆவது ஆண்டு விழா இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் நடந்த ’இந்தியாவுக்காக கூகுள்’ எனும் விழாவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் 100 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதி ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ள கூகுள் நிறுவனம், இதுவரை 52 ரயில் நிலையங்களில் இந்த வசதியை ஏற்படுத்தியுள்ளது.

இலவச வைஃபை திட்டத்தை வணிக வளாகங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கும் கூகுள் ஸ்டேஷன் எனும் பெயரில் விரிவுபடுத்த இருப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், வாட்ஸ் அப்புக்குப் போட்டியாகக் களமிறக்கப்பட்டுள்ள அல்லோ மொபைல் அப்ளிகேஷனில் செயற்கை அறிவு செயலியின் செயல்பாடு இந்தி மொழியிலும் உருவாக்கப்பட இருப்பதாக கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இணைய வேகம் குறைவான இடங்களிலும் யூ டியூப் இணையதளத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும் வகையில் யூடியூப் கோ எனும் பெயரில் புதிய அப்ளிகேஷனையும் கூகுள் அறிமுகப்படுத்த இருக்கிறது. உலக அளவில் கூகுள் நிறுவனத்தின் இரண்டாவது பெரிய சந்தையாக இந்தியா இருந்து வருகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close