[X] Close
JUST IN
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்

மதுவிலக்கில் உண்மையான அக்கறை யாருக்கு? திமுக தலைவர் கருணாநிதி கேள்வி

who-really-cares-about-prohibition-dmk-chief-m-karunanidhi-questioned

மதுவிலக்கில் உண்மையான அக்கறையுள்ளவர்கள் யார் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

முதலமைச்சர் ஜெயலலிதா, நேற்றையதினம், சட்டப் பேரவையில், சில கருத்துகளைப் பதிவு செய்வது தனது கடமை என்று கூறிக் கொண்டு, தமிழகத்தில் 1971ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுவிலக்கு என்னால்தான் ரத்து செய்யப்பட்டது என்றும், 2007ஆம் ஆண்டில் பேரவையில் நான் கூறிய கருத்து ஒன்றையும் குறிப்பிட்டதோடு, மதுவிலக்கில் உண்மையான அக்கறை கொண்டுள்ளது அவருடைய தலைமையிலான அரசுதான் என்று தெரிவித்திருக்கிறார்.

1971ஆம் ஆண்டைப் பற்றியும், 2007ஆம் ஆண்டைப் பற்றியும் நினைவுகூர்ந்த ஜெயலலிதாவுக்கு, கடந்த ஆண்டு 21-7-2015 அன்று “திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று நான் அறிவித்தது எப்படித்தான் ஞாபகத்திற்கு வராமல் போயிற்றோ?

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 10-8-2015 அன்று மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக் கோரி அறவழியில் ஆர்ப்பாட்டம் தமிழகமெங்கும் நடத்தப்பட்டதே, அதுவும் ஜெயலலிதாவுக்கு தெரியவில்லை.

மதுவிலக்குப் பிரச்சினையிலே உண்மையான அக்கறையுள்ள அரசு எது என்பதும், அக்கறையுள்ளவர்கள் யார் என்பதும், தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். உண்மையிலேயே அக்கறை உள்ளவராக ஜெயலலிதா இருந்தால், ஐந்தாண்டு காலமாக ஆட்சியிலே இருந்த போது படிப்படியாக தமிழகத்திலே மதுவிலக்கை நடை முறைப்படுத்தியிருக்க மாட்டாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close