[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS திருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்
  • BREAKING-NEWS “மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
  • BREAKING-NEWS நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு

அமெரிக்க தேர்தலில் ஹிலாரி போட்டியிட காரணம் ஜெயலலிதா.... அதிமுக உறுப்பினர் பேச்சால் பேரவையில் சிரிப்பலை

admk-ramu-talk-about-meeting-with-hilary-jayalalithaa

முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆலோசனைப்படியே ஹிலாரி கிளிண்டன் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அதிமுக உறுப்பினர் சட்டப்பேரவையில் பேசியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று சட்டத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய குன்னூர் உறுப்பினர் ராமு, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது சென்னை வந்த ஹிலாரி கிளிண்டன் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்ததாகவும், அதன் எதிரொலியாகவே இன்று அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாகவும் கூறினார்.

மேலும், முதலமைச்சர் ஜெயலலிதா - ஹிலாரி கிளிண்டன் இடையிலான சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக உலகம் இன்று புகழ்ந்து கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். முதலமைச்சர் கொடுத்த ஊக்கத்தின் அடிப்படையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுவதாக ராமு பேசியதை அடுத்து, அவையில் சிரிப்பலை எழுந்தது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close