[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 10 காசு குறைந்து ரூ.4.08ஆக நிர்ணயம்
  • BREAKING-NEWS 2013-2017 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நவ.24 முதல் 29ஆம் தேதி வரை மாவட்ட அமமுக அலுவலகங்களில் விருப்பமனு அளிக்கலாம் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS கோவையில் இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதும் இல்லை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
  • BREAKING-NEWS எஸ்பிஜி பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • BREAKING-NEWS இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்; மகாராஷ்டிரா முதல் இடம் - மத்திய அரசு
  • BREAKING-NEWS சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது - நிதின் கட்கரி

அவதூறு வழக்குகள்: முதல்வருக்கு கருணாநிதி கேள்வி

karunanidhi-raises-concern-over-defamatory-cases-filed-by-tn-goverment

எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு உரிய பதில்களைக் கூற தைரியம் இல்லாதவர்கள்தான், அரசு செலவில் அ‌வதூறு வழக்குகளைத் தொடருவதாக திமுக தலைவர் கருணாநிதி சாடியிருக்கிறார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கும் அவர், அரசியல் எதிரிகள் மீது அவதூறு வழக்குக‌ளை தொடுக்க அரசைத் தூண்டும் வகையில், அனுமதி வழங்க ஒரு முதலமைச்சர் தன்னுடைய தனது அதிகாரத்தையும், செல்வாக்கையும் பயன்படுத்த முடியுமா என்று ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பாக நான்கு வார காலத்திற்குள் ஜெயலலிதாவே பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதையும் கருணாநிதி நினைவு கூர்ந்திருக்கிறார்.

ஜனநாயகத்தில் ஆட்சியை விமர்சிக்க சாமான்ய மனிதர்களுக்கு இருப்பது போன்று உரிமை, அரசியல் எதிரிக்கும் இருக்கிறது என நீதிபதி மிஸ்ரா கூறியிருப்பதை கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 1991ஆம் ஆண்டு ஜெயலலிதா முதன்முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற போது 180 அவதூறு வழக்குகளை எதிர்க்கட்சியினர் மீது தொடுத்ததாக விமர்சித்துள்ளார். இதற்கு முன்னர் நீதிபதிக‌ள் பலமுறை தெரிவித்த‌ கருத்துகளுக்கு செவி மடுக்காதவர், தற்போது தனது பாதையை மாற்றி அமைத்துக் கொள்ளப்போகிறாரா என்றும் கருணாநிதி வினவியிருக்கிறார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close