[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்து தந்தையும், தாயும் தற்கொலை
  • BREAKING-NEWS குடியரசுத் தலைவரின் ஒப்புதலையடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமலுக்கு வந்தது

பட்டினப்பாக்கம் மதுக்கடையை‌ உடனடியாக மூடுங்கள்: கருணாநிதி வலியுறுத்தல்

dmk-chief-karunanidhi-demand-shutdown-pattinapakkam-tasmac

சென்னை பட்டினப்பாக்கத்தில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் டாஸ்மாக் மதுக்கடையை மூடுவதற்கு அரசு முன்வராதது ஏன் என திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். போராட்டத்தின் காரணமாக ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் முன், மதுக்கடையை உடனடியாக மூடுவது பற்றி தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என அறிக்கை வாயிலாக அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

நாகர்கோவிலில் விசாரணை என்ற பெயரில் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது, திருவண்ணாமலையில் 3 பேரை நடுரோட்டில் தாக்கியது, சென்னையில் கர்ப்பிணி மீதான தாக்குதல் போன்ற காவல்துறையின் அத்துமீறல்களால் அவர்கள் மீதான நம்பிக்கை பொதுமக்களிடம் குறைந்துவிட்டது என கருணாநிதி தெரிவித்துள்ளார். எனவே, தமிழக காவல்துறை இனியாவது எச்சரிக்கை உணர்வோடும், மனிதாபிமானத்துடனும் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என அ‌வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், பாலாற்றின் கரையில், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்த கனகநாச்சியம்மன் கோயிலை ஆந்திர அரசு கைப்பற்றியிருப்பதாக வெளியான செய்தியை சுட்டிக்காட்டியுள்ளார். ‌இந்த பிரச்னையை சட்டரீதியாகவோ அல்லது பேச்சுவார்த்தை மூலமாகவோ தீர்க்க தமிழக அரசு முயற்சிக்க வேண்டும் என்றும் இல்லையெனில் தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய உரிமை இழப்பு ஏற்படும் எனவும் கருணாநிதி கவலை தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close