[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தடியடி
  • BREAKING-NEWS தமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தலைமை தகவல் ஆணையராக நியமனம்
  • BREAKING-NEWS சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் யார்?

who-is-next-tamilnadu-congress-leader

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கட்சித் தலைமைக்கு ராஜினாமா கடிதத்தை அளித்து ஒரு மாதமாகியும், புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதில் இழுபறி நீடிக்கிறது.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை திருநாவுக்கரசர், தங்கபாலு, கராத்தே தியாகராஜன், சுதர்சன நாச்சியப்பன், மாணிக் தாகூர், செல்லக்குமார், விஜயதாரணி, கோபிநாத் உள்ளிட்ட தலைவர்கள் தனித் தனியாக சந்தித்து பேசினர். அவர்களில் பலர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்தனர்.

இந்நிலையில், ஈ.வி.கே.எஸ்‌ இளங்கோவனை டெல்லிக்கு அழைத்த ராகுல் காந்தி, அடுத்த தலைவராக யாரை நியமிக்கலாம் என்று கேட்டதாக தெரிகிறது. இன்று சோனியா காந்தியை இளங்கோவன் சந்தித்தப் பிறகு அடுத்த தலைவர் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன‌.

அதற்கான பட்டியலில் திருநாவுக்கரசரும், சுதர்சன நாச்சியப்பனும் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. தி.மு.க.வுடன் நல்லுறவை பேணவும், உள்ளாட்சி தேர்தலில் திறம்பட செயல்படவும் கூடிய ஒருவரை தலைவராக நியமிக்க டெல்லி தலைமை முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close