[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS லண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்
  • BREAKING-NEWS சென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி
  • BREAKING-NEWS கோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்
  • BREAKING-NEWS அசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது
  • BREAKING-NEWS தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை

பொது மொழி ஏற்கெனவே இருக்கிறது, அதுதான் ஆங்கிலம் - கமல்ஹாசன்

common-language-issues-kamalhassan-differs-from-rajini-s-statement

எந்தவொரு நாட்டுக்கும் பொதுவான ஒரு மொழி இருந்தால் நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது. ஆனால், துரதிஷ்டவசமாக நம் நாட்டில் பொது மொழியை கொண்டு வர முடியாது. இந்தி மட்டுமல்ல எந்த மொழியையும் திணிக்கக் கூடாது. இந்தி மொழியை திணித்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழ்நாட்டில் மட்டுமல்ல தென்னிந்தியாவிலும் சரி வட இந்தியாவிலும் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார்.

Rajinikanth on Hindi imposition

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பொது மொழி குறித்த கேள்விக்கு ரஜினியின் கருத்தில் இருத்து மாறுபட்டுள்ளார், அவர் கூறுகையில் " என் தாய்மொழி மீது கை வைக்காத வரை அவர்கள் கருத்துக்கள் ஏற்கப்படும். ஆனால் தாய்மொழி மீது கைவைத்தால் மன்னிக்கப்படாது. பொதுவான மொழியாக ஆங்கிலம் இருக்கிறது. விபத்தின் மூலம் கிடைத்த மொழி ஆங்கிலமாக இருந்தாலும்  நன்மையாக அமைந்தது. அடிமையாக இருந்த போதிலும்  ஆங்கிலத்தை வைத்து நாம் வேறு கருவி செய்து கொண்டோம் என்று தெரிவித்த அவர். 

Image result for kamal haasan

எதிர்காலத்தை பற்றி யோசிக்காமல் 5 மற்றும் 8 வகுப்பு பொதுத்தேர்வுக்கு  மூன்று ஆண்டு விலக்கு  கொடுத்ததன் மூலம் மூன்று ஆண்டினை கடத்துவார்கள் எனதோன்றுகிறது. கல்வி துறையில் சீரிய திட்டங்கள் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close