[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

“ராமர் கோயில் விவகாரத்தில் சிலர் குப்பையாக பேசுகிறார்கள்” - மோடி மறைமுக தாக்கு

modi-slams-sena-for-harping-on-ram-mandir-issue

ராமர் கோயில் விவகாரத்தில் சிலர் குப்பை கருத்துகளை கூறி வருவதாக பிரதமர் மோடி சாடியுள்ளார்.

நாசிக் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, “ராமர் கோயில் விவகாரம் தொடர்பாக சிலர் குப்பை கருத்துகளை பேசி வருகின்றனர். ஒட்டுமொத்த நாட்டு மக்களும் நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். உச்சநீதிமன்றத்தை மதிப்பது மிகவும் முக்கியமானது. ராமர் கோயில் வழக்கில் நீதிமன்றம் கால அவகாசம் எடுத்து விசாரித்து வருகிறது. உச்சநீதிமன்றம் விசாரித்து வருகையில், சிலர் ஏன் அதிகப்படியாக பேசி வருகிறார்கள்?

நாம் உச்சநீதிமன்றத்தின் மீதும் அம்பேத்கர் வழங்கியுள்ள உண்மையான அரசியலமைப்பு சட்டத்தின் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும். நாட்டின் நீதித்துறை நடைமுறைகள் மீது நம்பிக்கை வையுங்கள். அதனை ராமர் கடவுள் பொருட்டும் கைகூப்பி கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

       

யாருடைய பெயரையும், எந்த அமைப்பின் பெயரையும் வெளிப்படையாக கூறாமல் பிரதமர் மோடி இந்தக் காட்டமான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். இருப்பினும், ராமர் கோயில் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்காமல் அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று சிவசேனாதான் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. அதனால், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை குறி வைத்துதான் அவர் இந்த விமர்சனங்களை முன் வைத்துள்ளார் என சிலர் கூறி வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில், பிரதமர் மோடியில் இக்கருத்து முக்கியமானதாக கருதப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close