[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

ரயில் நிலைய இந்தி எழுத்துகளை அழித்து போராட்டம் - திமுகவினர் 22பேர் கைது

dmk-cadres-were-detained-for-blackening-the-hindi-text-on-the-gudiyattam-railway-station-signage-in-vellore-district

ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தி மொழியைத் திணிக்கும் மத்திய அரசின் முயற்சிகளைக் கண்டித்து, வரும் 20 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுமென திமுக அறிவித்துள்ளது. இந்தி மொழி இந்தியாவின் அடையாளம் என்றும் இந்தியாவை ஒருங்கிணைக்கும் மொழியாகவும் இருக்கும் எனவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதை அடுத்து திமுக இந்த அறிவிப்பை வெளியிட்டது.

இந்நிலையில், வேலூர் குடியாத்தம் ரயில் நிலையத்தில் உள்ள பதாகைகளில் இருக்கும் இந்தி மொழியை அழித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தி மொழி திணிப்புக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.

 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close