[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்
  • BREAKING-NEWS விண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

“ராகுலின் பேச்சை இந்தியாவுக்கு எதிராக பாக். பயன்படுத்துகிறது” - பாஜக குற்றச்சாட்டு

kashmir-bjp-demands-apology-from-rahul-says-pakistan-used-his-j-k-comments-as-evidence-in-un

காஷ்மீரின் தற்போதைய நிலவரம் குறித்த தன்னுடைய கருத்துக்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் முன்னேற்பாடுகளுடன் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை சமீபத்தில் பாஜக அரசு நீக்கியது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு அங்கு இயல்பு நிலை திரும்பியுள்ளதாக மத்திய பாஜக அரசு கூறிவருகிறது. ஆனால், காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பவில்லை என கூறிவரும் எதிர்க்கட்சியினர் அங்கு நேரில் பார்வையிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

                     

ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் ஸ்ரீநகர் வரை சென்று பின்னர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது பேசிய ராகுல் காந்தி காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பவில்லை என்றும் கொடுமையான நிர்வாகம் அங்கு நடைபெற்று வருவதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், ராகுல் காந்தியின் கருத்தினை பாகிஸ்தான் தனக்கு சாதகமாக ஐ.நாவில் பயன்படுத்தும் என பாஜக கூறியுள்ளது. தன்னுடைய கருத்துக்காக ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சரும் பாஜக செய்தி தொடர்பாளருமான பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் தங்களது கருத்துக்களை திரும்ப பெற வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

‘காங்கிரஸ் கட்சியினரும், ராகுல் காந்தியும் பொறுப்பற்ற அரசியலை செய்து வருகிறார்கள். நாட்டிற்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்துகிறார்கள். காஷ்மீரில் வன்முறைகள் நடப்பதாக அவருக்கு யார் சொன்னார்கள். அங்கு இயல்பு நிலைதான் உள்ளது’ எனவும் ஜவடேகர் சாடியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close