[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்

ஜம்மு-காஷ்மீர், லடாக் மக்களுக்கு புதிய விடியல் காத்திருக்கிறது - பிரதமர் மோடி

passage-of-j-k-bill-momentous-occasion-new-dawn-awaits-pm-modi

ஜம்மு-காஷ்மீர், லடாக் மக்களுக்கு புதிய விடியல் காத்திருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து நேற்று ரத்து செய்யப்பட்டது. மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அத்துடன் இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஜம்மு- காஷ்மீர் பிரிக்கப்பட்டது. சட்டப்பேரவைக் கொண்ட யூனியன் பிரதேசமாக ஜம்மு- காஷ்மீரும், சட்டப்பேரவையற்ற யூனியன் பிரதேசமாக லடாக்கும் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. இது தொடர்பான மசோதாவை மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். கடும் விவாதங்களுக்கு இடையே மாநிலங்களவை மற்றும் மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

                 

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டுள்ளார். மோடி தன்னுடைய ட்விட்டரில், “130 கோடி இந்தியர்களின் கனவுகளை நாம் ஒன்றாக இணைந்து ஒன்றாகவே நிறைவேற்றுவோம். காஷ்மீர் மறுவரையறை மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் மிக முக்கியமான தருணம். 

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் சகோதர, சகோதரிகளை அவர்களது தைரியம் மற்றும் சிக்கல்களில் இருந்து மீண்டு வரும் ஆற்றலுக்காக வணங்குகிறேன். ஜம்மு-காஷ்மீர் தன்னுடைய விலங்கில் இருந்து விடுபட்டுள்ளது. புதிய விடியல் அவர்களுக்கு காத்திருக்கிறது. இந்த மசோதாக்கள் மூலம் ஒருங்கிணைப்பு, அதிகாரமளிப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இளைஞர்களின் திறமைகள் இனி வெளிப்பட வாய்ப்பு கிடைக்கும். உள்ளூர் உள்கட்டமைப்பு மேம்படும். 

                

லடாக் மக்களுக்கு சிறப்பு வாழ்த்துகள். அவர்களது நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் ஒட்டுமொத்தமாக ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சி அதிகரிக்கும். ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது, சர்தார் வல்லபாய் படேல், அம்பேத்கர் மற்றும் ஷியாமா பிரசாத் முகர்ஜி ஆகியோருக்கு சமர்ப்பணம். பல்வேறு கருத்துக்களை தெரிவித்த அனைத்து எம்பிக்களுக்கும் எனது வாழ்த்துகள்.

               

துணை குடியரசுத் தலைவரும் மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடு, மக்களவை தலைவர் ஓம் பிர்லா ஆகிய இருவரும் அவையை சிறப்பாக வழிநடத்தினார்கள். ஒட்டுமொத்த நாட்டின் பாராட்டையும் அவர்கள் பெற்றுள்ளார்கள். ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் மக்களுக்கு சிறப்பான வாழ்க்கையை உறுதி செய்ய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடர்ச்சியாக பணியாற்றினார். அவரது அர்ப்பணிப்பும், விடாமுயற்சியும் மசோதாவில் நன்றாக தெரிந்தது” என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close