[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்

வேலூரில் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின்

mk-stalin-election-campaign-at-vellore

வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் 3-ஆவது நாளாக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து ஸ்டாலின் வாக்கு சேகரித்து வருகிறார். இன்று காலை விருப்பாட்சிபுரத்தின் முக்கிய வீதியில், நடைப்பயணமாகச் சென்ற ஸ்டாலின், வியாபாரிகள், பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

தொடர்ந்து, அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பென்னாத்தூ‌ர் கி‌ராமத்தில் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்பகுதியில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னை குறித்து ஸ்டாலின் கேட்டறிந்தார். அணைகட்டு பகுதியில் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் எனவும் ஸ்டாலின் உறுதி அளித்தார்.

பரப்புரையின்போது பலரும் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர். சித்தேரி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடத்திய ஸ்டாலின், ஏற்கெனவே தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதுபோல், கேபிள் கட்டணம் குறைக்கப்படும் என மக்களிடம் உறுதியளித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close