[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்

“நீங்கள் அல்வா கொடுத்து ஏமாற்றினீர்கள்”- முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் பதில்

mk-stalin-reply-to-cm-palanisamy

நாங்கள் மிட்டாய் கொடுத்து ஏமாற்றியதாக நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் நீங்கள் அல்வா கொடுத்து ஏமாற்றியதாக நான் கூறுகிறேன் என மு.க.ஸ்டாலின் முதலமைச்சருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

வேலூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட மு.க.ஸ்டாலின், “ ஆட்சி இன்னும் ஒரு மாதத்தில் என்ன ஆகும் என்பது தெரியும். ஆளும் கட்சிக்கு மக்கள் ஆதரவு அளித்திருந்தால் ஏன் 22 தொகுதியில் வெற்றி பெறவில்லை. நாங்கள் மிட்டாய் கொடுத்து ஏமாற்றியதாக நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் நீங்கள் அல்வா கொடுத்து ஏமாற்றியதாக நான் கூறுகிறேன்.

கேபிள் டீவி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. நகை கடன் ரத்து, விவசாய கடன் ரத்து என நாங்கள் சொல்லியுள்ளோம். சொன்ன வாக்குறுதியை நான் நிறைவேற்றுவேன். ஏனென்றால் நான் கருணாநிதியின் மகன்” என தெரிவித்தார்.

முன்னதாக பொய் வாக்குறுதி என்ற மிட்டாயை மக்களிடம் கொடுத்து பொய்யான வெற்றியை திமுக பெற்றது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்திருந்தார்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close